வியாழன், 2 செப்டம்பர், 2010

நகைச்சுவை

1. கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து எல்லோரும் சிரித்தால் அதற்கு என்ன பெயர்?

'சிரி'க்கெட்.

2. தங்கச்செயின் அணிந்திருப்பவர்கள் பொதுவாக பயப்படுவார்கள், ஏன்?

சங்'கிலி'.

3. என்னுடைய தாத்தாவின் அப்பாவைத் தான் குதிரைக்குப் பிடிக்கும், இதன் எதனால்?

'கொள்ளு' தாத்தாவாக இருப்பதால்.

4. 'வணக்கம்' என்று சிலர் வெறுப்பாக சொல்லுவதேன்?

நமஸ்'காரம்' என்பதனால்.

5. தொலைக்காட்சியில் உங்களுக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகள் வந்தால் அதை எப்படித்திட்டலாம்?

'தொல்லை'க் காட்சி.

6. இலக்கணம் பலருக்கும் கடுமையாக இருப்பதால் அதை அவர்கள் எப்படி அழைக்கலாம்?

இலக்'கணம்'.

7. நடிகர் நாகேஷpடம் பணம் இல்லை என்றால் நாம் அவரை எப்படி அழைக்க வேண்டும்?

''நோ கேஷ்;''

8. சிகரெட் முனையில் தீ வைத்தால் ஏன் அது சிவப்பாக எரிகிறது?

சிக'ரெட்' (RED)

0 comments:

கருத்துரையிடுக