சிவகங்கை, டிச. 1-
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின்சுதன், கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி ரவுடிகளால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சிக்கு சென்ற சிலர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி அருகே உள்ள வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகள் பிரபு, பாரதி, முத்துக்குமார் உள்பட 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாரதி உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான பிரபு உள்பட சிலர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் பிரபு, பாரதி உள்பட சிலர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பிரபு மற்றும் பாரதியை மற்றொரு வழக்கில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து போலீசார் சிவகங்கை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு, தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இரவில் மானாமதுரை மேலமேல்குடி அருகே கால் பிரிவு தீத்தான்பேட்டை சாலையில் பிரபு, பாரதி இருவரும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான போலீசார், இருவரையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரபு, பாரதி இருவரும் சுருண்டு விழுந்து இறந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கைதிகள் பிரபு மற்றும் பாரதியை தீண்டாமை வழக்கு விசாரணைக்காக, சிவகங்கை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். மதுரை கே.கே.நகர் பகுதியில் சென்றபோது, அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியதால், போலீசார் வேனை நிறுத்தி உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக பிரபு மற்றும் பாரதி, காவலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், போலீஸ்காரர்கள் முத்தையா, சித்திரைவேல் ஆகியோரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். மானாமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீஸ் காரர்கள் பூமிநாதன், தினேஷ்குமார் ஆகியோர் மேலமேல்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தபோது, பிரபு மற்றும் பாரதி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
மேலும் அரிவாளாலும் வெட்டியதில், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்து அங்கு வந்த துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு படை, பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பிரபு, பாரதி இருவரும் குண்டு பாய்ந்து விழுந்துள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மானாமதுரை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரபுவின் சொந்த ஊரான வி.புதுக்குளத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் திருப்பாச்சேத்தி, சிவகங்கை மற்றும் சிட்காட் போலீஸ் நிலையங்களில் உள்ளன. இதேபோல் பாரதி மீது 5 வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரபுவின் மனைவிக்கு போலீசார் தகவல் கொடுத்த மறுநாளே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வெள்ளி, 30 நவம்பர், 2012
சனி, 23 ஜூன், 2012
முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா!
Posted by
இம்ரான்
at
2:09 AM
SDPI கட்சி உருவாகி மூன்று ஆண்டுகளை கழித்து 4 வது ஆண்டில் அடுயெடுத்து வைக்கிறது. இதனையொட்டி நாடுமுழுவதும் SDPI கட்சியினர் 4 ம் ஆண்டு துவக்கத்தினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் கட்சி சார்பாக 21-06-2012 இன்று நகர் முழுவதும் ஊர்வலமாக வந்து அரபு சாகிபு பள்ளிவாசல் அருகிலும், பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர் போன்ற பகுதிகளிலும் கட்சி கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்கினர் மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மச்சான் (எ) A. அபுபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முகைதீன் பள்ளி திடலில் காலை 11.00 மணியளவில் இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்தினர்.
இரத்தவகை கண்டறியும் முகாமை மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் துவங்கி வைக்க ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது இரத்தம் எந்த வகையை சார்ந்தது என அறிந்துகொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்கள் வழங்கினார். அணைத்து நிகழ்ச்சிகளிலும் SDPI கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதன், 1 டிசம்பர், 2010
Wi-Fi கதிர்கள்
Posted by
இம்ரான்
at
6:26 AM
Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்!
Posted by
இம்ரான்
at
6:25 AM
இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபடக் கூடாது; ஒருமைபாட்டுடனும், ஒத்த கருத்துடனும் இருந்து விடக் கூடாது என்பதற்காக உலக முழுவதும் படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றாரகள். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களாகிய நாமும் அறிந்தும் அறியாமலும் துணை போய்க் கொண்டிருக்கின்றோம்.
இன்றை இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி ஜமாஅத்ஆகளாக, கட்சிகளாக, கழகங்களாக சிதறிக்கிடக்கின்றன.
“உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயமே இதில் பிரிவுகளே இல்லை” என்ற அல்குர்ஆனின் வேத வரிகளுக்கு மாற்றமாக சமுதாயம் பிரிந்து உள்ளது. கட்சிகளும், இயக்கங்களும், கழகங்களும் எப்பொழுது முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டன? நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் இருந்தனவா?
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தனவா? அல்லது ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தனவா? ஷைகுல் இஸ்லாம் என்று போற்றப்படுகின்ற இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ரி 8அம், நூற்றாண்டிலாவது இவ்வியக்கங்கள் இருந்தனவா? இமாம் ஸுயூத்தி(ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவ்வியக்கங்கள் இருந்தனவா?
எப்போது இந்த ஜமாஅத்துகள், கட்சிகள் வந்தன? யார் இவற்றை உண்டாக்கியது? இன்று இஸ்லாம் ஏசப்படுவதற்கும், பேசப்படுவதற்கும் இவைகளெல்லாம் கருவிகளாப் பயன்படுகின்றன.
இமாமுல் அஃழம் அபூஹனீபா(ரஹ்)
இந்த இஸ்லாமிய உம்மத்தில் ஜமாஅத்துகளென்றும் இயக்கங்களென்றும் இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததென்று யாரும் சொல்ல முடியாது.
இமாமுல் அஃழம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் அன்று ஈராக்கில் மிகப் பெரிய மார்க்க அறிஞராக விளங்கினார்கள். ஹதீது கலையில் சிறப்பான தேர்ச்சியும் நாவன்மையும் கொண்டு விளங்கினார்கள். இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் விரும்பியிருந்தால் ஈராக்கில் மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் மாலிக்(ரஹ்)
இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு முதல் சட்ட நூலை தந்த இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தன் சொந்தக் கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டால் என் சொந்தக் கருத்துக்கு இங்கு வேலை இல்லை. இறைவனுக்கும் இறை தூதருக்கும் மாறாக நான் எதையும் சொல்ல முடியாது. தன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுவதை கேட்டு நடக்கும்படி இறைவன் வற்புறுத்தியுள்ளான்.
“அவனுடைய ஏவலுக்கு மாறுபட்டு நடப்பவர்கள் தமக்கு கடுமையான சோதனையும் மிகப்பொரும் வேதனையும் உண்டு என்பதைப் பயந்து நடந்து கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:63) என்பதாக கண்டனமும் தெரிவித்துள்ளான். எனவே என் கருத்து எதையும் முன் வைக்க விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.
கலீஃபா மன்ஸூர் அவர்கள் இமாம் அவர்களின் நூலான “முஅத்தா” வை அரசாங்க ஹதீஸ் நூலாக அறிவித்து விட விரும்பிய பொழுது, இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். அன்று விரும்பியிருந்தால் இஸ்லாத்தின் பேரால் மாபெரும் இயக்கத்தை ஜமாஅத்தை ஏற்படுத்தியிருக்காலம். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
இமாம் ஷாஃபியீ(ரஹ்)
இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் பாக்தாத்தில் இருந்தபொழுது ஏமன் கவர்னர் அங்கு வந்தார். அவரிடம் சொல்லப்பட்டது இமாம் அவர்கள் சிறந்த மார்க்க அறிஞர். சிறந்த பேச்சாளர், எழுத்தாற்றல் நிரம்பியவர் என்று எனவே ஏமன் கவர்னர் தமது கத்தீபாக (பிரச்சாரகர்) இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்களை ஏமனுக்கு அழைத்துச் சென்றார்.
இமாம் அவர்களின் அறிவுத் திறன் மார்க்க விளக்கங்களைக் கண்ட ஏமன் ஆலிம்கள் அவருக்கு கீழ்ப்படியவேண்டி வந்தது. உடனே ஏமன் ஆலிம்கள் பார்த்தார்கள். இந்த இத்ரீஸால் எங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது நாங்கள் ஸஹீஹ் என்று நம்பி கொண்டிருந்த ஹதீஸ்களை ளயீப் மவ்ளூ என்கிறார். எனவே இவரை விட்டு வைக்கக் கூடாது ன்று ஏமனிலிருந்து துரத்துவதற்கு ஒரு வழி கண்டார்கள்.
எப்படி என்றால், இன்று ஆதாரப்பூர்வமான குர்ஆனு, ஹதீஸை மக்கள் முன் வைக்கும் பொழுது, எங்கே தங்கள் புரோகித பிழைப்பிற்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து “குழப்பவாதிகள்”, “நஜாத்திகள்”, “வஹாபிகள்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களைப் போல அன்று ஒருவரை பிடிக்கவில்லை என்றால் “அலவீ” என்று குற்றம் சாட்டி அரசரிடம் கொண்டு போவார்கள். “அலவீ” என்றால் அலீ(ரழி) அவர்களின் ஆட்சியில் அமர்த்துவதற்காக பாடுபடுபவர் என்று பொருள்.
இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்களையும் அலவீ என்று பொய் சுமத்தி ஏமன் ஆட்சியாளர்களால் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். காரணம் இங்கு நாம்தான் பெரிய ரப்பு எமக்கு போட்டியாக இன்னொருவர் இருக்கக் கூடாது என்று ஏமன் ஆலிம்ள் நினைத்ததுதான்.
இமாம் அவர்கள் அன்று விரும்பியிருந்தால், ஏமனில் ஒரு சிறப்பான ஜமாஅத்தை, இயக்கத்தை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்)
“முஸனத் அஹ்மத்” எனும் புகழ் பெற்ற ஹதீஸ் நூலை இஸ்லாமிய உலகிற்கு வழங்கிய இமாம் அவர்கள், “கல்குல்குர்ஆன்” பிரச்சனையில், ஆட்சியளார்களின் கருத்துக்கு மாற்றமாக, குர்ஆன் புதிதாக உண்டாக்கப்பட்டதல்ல, அது அல்லாஹ் விடம் பூவ்வீகமாகவே இருந்ததுதான் என்று கூறினார்கள். இதற்காக அன்றைய அரசு இமாம் ஹம்பல்(ரஹ்) அவர்களை சிறையில் தள்ளி சித்ரவதை செய்தது. இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்கள் விரும்பியிருந்தால் ஒரு சிறப்பான ஜமாஅத்தை அன்று உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இமாம் அபூதாவூத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “இமாம் அஹ்மது இப்ன ஹம்பல்(ரஹ்) அவர்கள் நடத்திய மஜ்லிஸ்கள் அனைத்தும் மறுமையை நினைவூட்டுவதாகவே இருந்தன.
“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம்” (அல்குர்ஆன் 35:28) அல்லாஹ்கூறிய அருள்மறைவாக்கு. அல்லாஹ்வைப் பற்றி அறிவு, ஞானம் இறையச்சம் இருந்ததினால், பார்போற்றும் இமாம்கள் தங்களின் அறிவாற்றலால் சமுதாயத்தைக் கூறு போடவில்லை. மாறாக குர்ஆன், ஹதீஸை எடுக்க வேண்டியது; எங்கள் சொல்லைத் தள்ளி விட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்கள்.
இயக்கம் ஏன்? எதற்கு?
இன்று இமாம்களின் பெயரால் பின்பு வந்தவர்கள் ஏற்படுத்திய மத்ஹபுகளைக் கூடாது என்று கூறும் தவ்ஹீது ஆலிம்கள் புதிய மதஹபுகளாக புதுப்புது இயக்கங்களை ஆரம்பித்து வருகின்றனர். இயக்கம் ஏன் என்ற கேள்விக்கு “முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். ஒழுக்க சீரழிவில் உள்ளனர். பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் சிறுபான்மையினராக துன்பப்படுகின்றனர். ஆகவே இயக்கம் தேவை” என்று நியாயம் கற்பிக்கின்றனர்.
பொருளாதாரப் புரட்சி
நமது அருமை ரசூல்(ஸலல்) அவர்கள் அன்று நினைத்திருந்தால், மக்கமாநகரில் பொருளாதார திட்டங்களை மக்கள் முன் வைத்து மாபெரும் பொருளாதார புரட்சி ஏற்படுத்தியிருக்கலாம். பொருளாதாரத்தின் பெயரால் மக்களை ஒன்று படுத்தியிருக்கலாம். அதற்கான சூழ்நிலை அங்கு ஏராளமாக இருந்தது. காரணம் குரைஷி தலைவர்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே இருந்தனர். அடிமை வணிகம் பிரபலமாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் கூட இளமையில் ஒரு சில “கீராத்” பணத்துக்கு ஆடு மேய்த்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பொருளாதார பிரச்சினையை முன் வைத்து மக்களை ஒன்றுபடுத்தவில்லை.
சிறுபான்மை சமுதாயம் பாதிக்கப்படுதல்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்கள் அனைவரும் ஏழை எளியவர்களே. பலர் அடிமைகளாக எந்த ஒரு சலுகையும் இல்லாமல் குரைஷி தலைவர்களிடம் அடி பணிந்து வாழ்ந்தவர்கள். பிலால்(ரழி), அம்மார் (ரழி), கப்பாப்(ரழி) ஆகியோர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே பெரும்பான்மை குரைஷிகளிடம் துன்பப்படடனர். “எங்கள் துன்பத்தை நீக்குங்கள்” என்று அம்மார்(ரழி) அவர்கள் கோரியபொழுதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறியது.
“யாசிருடைய குடும்பத்தினரே பொறுங்கள்! சுவர்க்கம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது தான்”.
இந்த உலகில் கிடைக்கும் வெற்றியை எதிர்பார்த்து பெரும்பான்மை குரைஷிகளை உடனுக்குடன் நபி(ஸல்) அவர்கள் எதிர்க்க வில்லை. இறுதிநாளில் கிடைக்கும் வெற்றியை இலக்காய் கொண்டே ஏகத்துவத்தை மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள்.
சமுதாயத்தில் ஒழுக்க சீரழிவு
இன்றைய இஸ்லாமிய மக்களிடமும் நாட்டிலும் ஒழுக்கக் கேடுகள் உச்சகட்டத்தில் உள்ளன. ஆகவே இச்சீர்கேடுகளைக் களைய இயக்கம் அவசியமானது என்றும் சிலர் கூறலாம்.
ஆனால் அருமை ரசூல்(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த மக்கமாநகர் ஒழுக்கக் கேட்டின் உச்சயில் அன்று இருந்தது.” கஃபாவை நிர்வாணமாக தவாஃபு செய்யும் பெண்கள், இன்றைய சிவப்பு விளக்குப் பகுதி என்று கூறுகிறார்களே, அது அன்றே நடைமுறையில் இருந்து வந்தது. அன்றைய அரபு நாட்டின் விபச்சாரிகள் தங்கள் வீடுகளில் சிவப்புக் கொடியை ஏற்றி, நாங்கள் விலைமகள்கள் என்று விளம்படுத்துவார்கள்.
ஒருவனுக்கு பல மனைவியர் இருப்பார்கள். இந்நிலையில் தன் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அவனது புதல்வர்கள் வீட்டிற்கு ஓடுவார்கள். தன்னைப் பெற்ற தாயைத் தவிர்த்து மற்ற தன் தந்தையின் மனைவிகளில் தனக்குப் பிடித்தமான பெண்ணின் ஆடையை தங்களின் தோள்களில் போட்டுக் கொள்வார்கள். யார்யாருக்கு, யாருடைய ஆடை கிடைத்ததோ அப்பெண் அவன் மனைவி. தாயை தாரமாக ஏற்றக் கொள்ளக் கூடிய கேடு கெட்ட சமுதாயமாக அன்றைய சமுதாயம் நிலவியது.
அருமை ரசூல்(ஸல்) அவர்கள் விரும்பியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒழுக்கப் புரட்சி ஒன்றை அங்கு கொண்டு வந்திருக்கலாம். நிச்சயமாக அது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
மனிதர்களை ஒன்றுபடுத்தும் ஏகத்துவம்
ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் மனிதர்களை ஒன்றுபடுத்த கட்சி உண்டாக்குவதற்கும், ஜமாஅத் உண்டாக்குவதற்கும், இயக்கம் உண்டாக்குவதற்குமுரிய எல்ல வழிகளையும் விட்டுவிட்டு, அல்லாஹ்(ஜல்) நபி(ஸல்) அவர்களை தனது வழியில் வளர்த்தெடுக்கின்றான். நபியே! சொல்லுங்கள்,” நான் ஒரு நபி”; அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
இந்த மனித சமுதாயம் ஒன்றுபட வேண்டும். பிறகு எதன் காரணமாகவும் அது வேறுபடக் கூடாது என்பதற்காக ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்திய முதல் சமுதாயத்தை உருவாக்கினார்கள். இப்படி ஒன்றுபடுத்தப்பட்ட சமதாயத்தில் ஸல்மான்(ரழி), ஸுகைபு(ரழி), பிலால்(ரழி) போன்றோர் இருந்தார்கள். அவர்கள் யாரும் உணரவில்லை. நான் பாரசீகத்தை சேர்ந்தவனென்றும், ரோம் நாட்டைச் சேர்ந்தவனென்றும்; ஹபஸ் நாட்டை சேர்ந்தவனென்றும். அவர்கள் அல்லாஹ்வின் அருளால் ஒன்றுபட்ட சகோதரர்களாக ஆகிப் போனார்கள்.
இந்த ஏகத்துவ அடிப்படையில் ஒன்றுபட்ட சமுதாயத்தின் காலடியில் மாபெரும் பேரரசுகள் மண்டியிட்டன. அந்நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து பொருளாதார தளைகளிலிருந்தும் விடுவித்து ஒழுக்கச் சீலர்களாக மாற்றிக் காட்டினார்கள். சகோதரத்துவத்தை நிலை நாட்டினார்கள்.
இஸ்லாம் அவர்களை சகோதரர்களாக்கிய பிறகு எந்த ஆலிமும், எந்த இமாமும், எந்த அறிஞனும் முஸ்லிம்களைப் பிரிப்பதற்கு, அவர்களை துண்டாடுவதற்கு அவர்களைத் தன்பால் அழைப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
ஆதாரம் உண்டா?
நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து எடுத்துச் சொல்லுங்கள். ஒரு இமாம், ஒர் அறிஞர் ஒரு முஜாஹித் ஒருவரையாவது எடுத்துக் காட்டுங்கள்? எங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய ஒருவராவது, அவர் தன்னுடைய பெயரால் அல்லது தான் வைத்த பெயரால், தன்னுடைய லட்சியத்தால், தான் வளர்தத் கொள்கையால ஜமாஅத் என்றும், இயக்கம் என்றும், கழகம் என்றும் உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் யாரும் சுட்டிக் காட்ட முடியாது.
இன்று பெரும்பான்மையான இயக்கங்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்கும், முஸ்லிம்களுக்காகப் போராடுவதற்கும் குர்ஆன், ஹதீஸ் வழிமுறையைக் கைவிட்டு, இஸ்லாம் தூக்கியெறிந்த ஜனநாயக சட்டங்களைத் தூக்கிப் பிடிக்கின்றன. அதனால் இவ்வுலகில் சில நன்மைகளை இவர்கள் பெறக்கூடும்.
ஆனால் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என உளமார ஏற்றுக் கொண்டவர்கள், இறுதி நாளில் கிடைக்கும் வெற்றியை மட்டுமே கவனத்தில் கொள்வர்.ன்இந்த உலகில் அல்லாஹ் இவர்களைக் கொண்டே தன் வாழ்க்கை நெறியை நிலை நாட்டலாம்; அல்லது இவர்கள் ஊட்டும் உணர்வில், காட்டும் தியாகத்தில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையைக் கொண்டும் நிலைநாட்டலாம். அல்லது அவர்கள் தயாரிக்கும் அடுத்த தலை முறையைக் கொண்டும் நிலை நாட்டலாம்.
அனைததும் ஏகன் அல்லாஹ்வின் நாட்டம் குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வதும், பிரச்சாரம் செய்வதும் மட்டுமே நமது பணி! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Dr.U.M.M.Nubar Mohamed Farook, SriLanka

தொழுகை மிகச் சிறந்த யோகா என்பதில் ஐயமில்லை :நாராயண் ஷெட்டி
Posted by
இம்ரான்
at
6:18 AM
முஸ்லிம்களின் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாக நேர்த்தியாக கடைபிடிக்கும்போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பலனளிக்கும். யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி அவர்கள் கூறியுள்ளார். தெற்கு கன்னடா பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களபுரம் ஸ்டேட் பேங்க் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. நாராயண் ஷெட்டியின் மாணவர் ஒருவர் யோகா கலையை செய்து காண்பித்தார் அதன் நன்மைகளை நாராயண் ஷெட்டி அவர்கள் தெளிவாக விளக்கினார்
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகளை வெகுவாக பாராட்டினார்.இறுதியில் தியானம் நடைபெற்றது.
அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ர்ண்டின் மாவட்ட தலைவர் அன்வர் சாதாத் அவர்கள் தேசிய அளவில் 16 மாநிலங்களில் இது போன்றதொரு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களியடையே எந்த வேறுபாடுமில்லை அதனை சாதிமதங்கள் பெயரால் மனிதர்கள் தான் உருவாக்கிவிட்டனர். இந்திய சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகளை களைய மன ஆரோக்கியமுள்ள மனிதர்கள் அவசியம். உடல் ஆரோக்கியமுள்ளவர்களுக்கே மன ஆரோக்கியமும் கிட்டும். அந்த வகையில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குறியது, என நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் மாரத்தானை தொடங்கிவைத்தவருமான மங்களபுரம் அலாய்சியஸ் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியை சுட்டிக்காட்டிய அவர் இந்திய கலாச்சாரத்தின் யோகா கலை மற்றும் தியானத்தை பயின்று மருத்துவர்களிடம் செலவளிப்பதை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மாவட்ட அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் இம்தியாஸ் பண்ட்வால் மாவட்ட சேம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
ரோஹிதாக்ஷா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மாரா அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார் ஒருங்கிணைப்பாளராக நசீர் தும்பெ அவர்களும் இஸ்மாயில் மலர் அவர்களின் நன்றியுரை யுடன் இந்த இனிதே நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

வெள்ளி, 12 நவம்பர், 2010
TNS INDIA என்ற அமெரிக்க நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு
Posted by
இம்ரான்
at
5:48 AM
20 மாநிலங்களில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
புது டெல்லி மும்பை கொல்கத்தா பெங்களுரு மற்றும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு நடந்துள்ளது . அதே சமயத்தில் குஜராத்தை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதுபோன்றதொரு கணக்கெடுப்பு திருவனந்தபுறத்தில் உள்ள கறிமடம் காலனியில் நடைபெற்றது.
இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், "ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?' "நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?' போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற 10 இந்தியா மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படுகிறது . பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே , 130 பேர் சந்திக்கவேண்டிய இலக்கை அவர்கள் அடைய முடியவில்லை
TNS INDIA என்ற இந்த நிறுவனத்தின் கிளைகள் புது டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை ஹைதராபாத் அஹ்மதாபாத் லக்னோ பட்ன புனே மதுர நாக்பூர் பெங்களுரு கொச்சி லூதியான மற்றும் புபநேஷ்வரில் உள்ளது .
எல்லா இடங்களிலும் முஸ்லிம்களை குறிவைத்து இவர்கள் அதிகம் வாழும் இடங்களில் மட்டும் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சுமார் ஆறாயிரம் பேரிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது என்று தெரிகிறது .
உலகம் மற்றும் இந்தியாவின் எதிர்கால போக்கை கணிக்க இந்த கணக்கெடுப்புகள் உதவும் என்று சொல்கிறது TNS .
அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி இந்த நிறுவனம் இச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவருகிறது .
இதனை கண்டித்து பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளா சட்டப்பேரவையை நோக்கி பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்தது .
இதில் அமெரிக்கா விற்கு எதிரான கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது . இத்தகைய கணக்கெடுப்பின் மூலம் இந்தியா மக்களை மதரீதியில் பிளவு படுத்த அமெரிக்க முயற்சித்து வருவதாக ஆர்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி கோஷங்களை எழுப்ப்பினர்.
அமெரிக்க சார்பில் கணக்கெடுப்பை நடத்திய TNS INDIA நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்
புதன், 27 அக்டோபர், 2010
உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை !
Posted by
இம்ரான்
at
7:06 AM
உலகப் புகழ்பெற்ற வோல்கஸ்வோகன் (Volkswagen), ஹெயடல்பெர்க் சிமென்ட் (HeidelbergCement) போன்ற மிக பெரிய ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
சமிபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லீம்களை பற்றி அவதூறு பரப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாகவும் இதை பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி அறிவு பெற்ற ஜனநாயாக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும் வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் வியாபார கொள்கைகள், செயல்திட்ட அமைப்புகளை, இலாபம் ஈட்டும் நடைமுறைகளை உலகில் பல முன்னணி பல்கலைகழகங்கள், கல்லூரிகள் தங்கள் பாட திட்டத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் புகழ்பெற்ற பொருளாதார நாளேடான விர்ட்ஸ்சாட்ஸ்வோசே (Wirtschaftswoche ) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சமுக வலைதளங்கள் மூலம் ஜெர்மனிய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அவற்றின் ரகசிய நிறுவன தகவல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
"முன்பு மின்னஞ்சல் மூலமாக நிறுவனங்களில் பயன்படுத்தும் மென்பொருட்களில் வைரஸ் பரப்பட்டது, ஆனால் தற்போது சமுக வலைதளங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிரல்கள்(add-on applications) முலம் நிறுவனங்களின் மென்பொருளுக்கு ஆபத்து விளைகின்றது", என்று ஜெர்மனியின் புகழ் பெற்ற ஆன்ட்டி-வைரஸ் நிறுவனம் கேஸ்பர்ஸ்கீ (Kaspersky) தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரி கிரிஸ்டியன் ஃபுச்சஸ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு பணிகளின் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதால் இதை தடை செய்துள்ளதாக டைம்ளர் (Daimler) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வலைதளத்தை 500 மில்லியன் (50 கோடி) மக்கள் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் அலுவகங்களில் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம் இது தான். இது அலுவலக பணிகளின் மின்னஞ்சலை விட அதிகம் பயன்படுத்தபடுகிறது.
ஜெர்மனியில் எடுத்த சர்வேயில் 30 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால் தயாரிப்பு பாதிக்கும் எனவும், 56 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால் பாதுகாப்பு தகவல்கள் திருடப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இலண்டனில் பள்ளி குழந்தைகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் ஒழுக்கக்கேடுகள் அடைவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது
நன்றி இந்நேரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)