புதன், 1 டிசம்பர், 2010

Wi-Fi கதிர்கள்

Post image for Wi-Fi கதிர்கள்
Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்!

இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபடக் கூடாது; ஒருமைபாட்டுடனும், ஒத்த கருத்துடனும் இருந்து விடக் கூடாது என்பதற்காக உலக முழுவதும் படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றாரகள். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களாகிய நாமும் அறிந்தும் அறியாமலும் துணை போய்க் கொண்டிருக்கின்றோம்.
இன்றை இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி ஜமாஅத்ஆகளாக, கட்சிகளாக, கழகங்களாக சிதறிக்கிடக்கின்றன.
“உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயமே இதில் பிரிவுகளே இல்லை” என்ற அல்குர்ஆனின் வேத வரிகளுக்கு மாற்றமாக சமுதாயம் பிரிந்து உள்ளது. கட்சிகளும், இயக்கங்களும், கழகங்களும் எப்பொழுது முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டன? நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் இருந்தனவா?
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தனவா? அல்லது ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தனவா? ஷைகுல் இஸ்லாம் என்று போற்றப்படுகின்ற இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ரி 8அம், நூற்றாண்டிலாவது இவ்வியக்கங்கள் இருந்தனவா? இமாம் ஸுயூத்தி(ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவ்வியக்கங்கள் இருந்தனவா?
எப்போது இந்த ஜமாஅத்துகள், கட்சிகள் வந்தன? யார் இவற்றை உண்டாக்கியது? இன்று இஸ்லாம் ஏசப்படுவதற்கும், பேசப்படுவதற்கும் இவைகளெல்லாம் கருவிகளாப் பயன்படுகின்றன.
இமாமுல் அஃழம் அபூஹனீபா(ரஹ்)
இந்த இஸ்லாமிய உம்மத்தில் ஜமாஅத்துகளென்றும் இயக்கங்களென்றும் இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததென்று யாரும் சொல்ல முடியாது.
இமாமுல் அஃழம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் அன்று ஈராக்கில் மிகப் பெரிய மார்க்க அறிஞராக விளங்கினார்கள். ஹதீது கலையில் சிறப்பான தேர்ச்சியும் நாவன்மையும் கொண்டு விளங்கினார்கள். இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் விரும்பியிருந்தால் ஈராக்கில் மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் மாலிக்(ரஹ்)
இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு முதல் சட்ட நூலை தந்த இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தன் சொந்தக் கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டால் என் சொந்தக் கருத்துக்கு இங்கு வேலை இல்லை. இறைவனுக்கும் இறை தூதருக்கும் மாறாக நான் எதையும் சொல்ல முடியாது. தன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுவதை கேட்டு நடக்கும்படி இறைவன் வற்புறுத்தியுள்ளான்.
“அவனுடைய ஏவலுக்கு மாறுபட்டு நடப்பவர்கள் தமக்கு கடுமையான சோதனையும் மிகப்பொரும் வேதனையும் உண்டு என்பதைப் பயந்து நடந்து கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:63) என்பதாக கண்டனமும் தெரிவித்துள்ளான். எனவே என் கருத்து எதையும் முன் வைக்க விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.
கலீஃபா மன்ஸூர் அவர்கள் இமாம் அவர்களின் நூலான “முஅத்தா” வை அரசாங்க ஹதீஸ் நூலாக அறிவித்து விட விரும்பிய பொழுது, இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். அன்று விரும்பியிருந்தால் இஸ்லாத்தின் பேரால் மாபெரும் இயக்கத்தை ஜமாஅத்தை ஏற்படுத்தியிருக்காலம். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
இமாம் ஷாஃபியீ(ரஹ்)
இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் பாக்தாத்தில் இருந்தபொழுது ஏமன் கவர்னர் அங்கு வந்தார். அவரிடம் சொல்லப்பட்டது இமாம் அவர்கள் சிறந்த மார்க்க அறிஞர். சிறந்த பேச்சாளர், எழுத்தாற்றல் நிரம்பியவர் என்று எனவே ஏமன் கவர்னர் தமது கத்தீபாக (பிரச்சாரகர்) இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்களை ஏமனுக்கு அழைத்துச் சென்றார்.
இமாம் அவர்களின் அறிவுத் திறன் மார்க்க விளக்கங்களைக் கண்ட ஏமன் ஆலிம்கள் அவருக்கு கீழ்ப்படியவேண்டி வந்தது. உடனே ஏமன் ஆலிம்கள் பார்த்தார்கள். இந்த இத்ரீஸால் எங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது நாங்கள் ஸஹீஹ் என்று நம்பி கொண்டிருந்த ஹதீஸ்களை ளயீப் மவ்ளூ என்கிறார். எனவே இவரை விட்டு வைக்கக் கூடாது ன்று ஏமனிலிருந்து துரத்துவதற்கு ஒரு வழி கண்டார்கள்.
எப்படி என்றால், இன்று ஆதாரப்பூர்வமான குர்ஆனு, ஹதீஸை மக்கள் முன் வைக்கும் பொழுது, எங்கே தங்கள் புரோகித பிழைப்பிற்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து “குழப்பவாதிகள்”, “நஜாத்திகள்”, “வஹாபிகள்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களைப் போல அன்று ஒருவரை பிடிக்கவில்லை என்றால் “அலவீ” என்று குற்றம் சாட்டி அரசரிடம் கொண்டு போவார்கள். “அலவீ” என்றால் அலீ(ரழி) அவர்களின் ஆட்சியில் அமர்த்துவதற்காக பாடுபடுபவர் என்று பொருள்.
இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்களையும் அலவீ என்று பொய் சுமத்தி ஏமன் ஆட்சியாளர்களால் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். காரணம் இங்கு நாம்தான் பெரிய ரப்பு எமக்கு போட்டியாக இன்னொருவர் இருக்கக் கூடாது என்று ஏமன் ஆலிம்ள் நினைத்ததுதான்.
இமாம் அவர்கள் அன்று விரும்பியிருந்தால், ஏமனில் ஒரு சிறப்பான ஜமாஅத்தை, இயக்கத்தை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்)
“முஸனத் அஹ்மத்” எனும் புகழ் பெற்ற ஹதீஸ் நூலை இஸ்லாமிய உலகிற்கு வழங்கிய இமாம் அவர்கள், “கல்குல்குர்ஆன்” பிரச்சனையில், ஆட்சியளார்களின் கருத்துக்கு மாற்றமாக, குர்ஆன் புதிதாக உண்டாக்கப்பட்டதல்ல, அது அல்லாஹ் விடம் பூவ்வீகமாகவே இருந்ததுதான் என்று கூறினார்கள். இதற்காக அன்றைய அரசு இமாம் ஹம்பல்(ரஹ்) அவர்களை சிறையில் தள்ளி சித்ரவதை செய்தது. இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்கள் விரும்பியிருந்தால் ஒரு சிறப்பான ஜமாஅத்தை அன்று உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இமாம் அபூதாவூத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “இமாம் அஹ்மது இப்ன ஹம்பல்(ரஹ்) அவர்கள் நடத்திய மஜ்லிஸ்கள் அனைத்தும் மறுமையை நினைவூட்டுவதாகவே இருந்தன.
“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம்” (அல்குர்ஆன் 35:28) அல்லாஹ்கூறிய அருள்மறைவாக்கு. அல்லாஹ்வைப் பற்றி அறிவு, ஞானம் இறையச்சம் இருந்ததினால், பார்போற்றும் இமாம்கள் தங்களின் அறிவாற்றலால் சமுதாயத்தைக் கூறு போடவில்லை. மாறாக குர்ஆன், ஹதீஸை எடுக்க வேண்டியது; எங்கள் சொல்லைத் தள்ளி விட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்கள்.
இயக்கம் ஏன்? எதற்கு?
இன்று இமாம்களின் பெயரால் பின்பு வந்தவர்கள் ஏற்படுத்திய மத்ஹபுகளைக் கூடாது என்று கூறும் தவ்ஹீது ஆலிம்கள் புதிய மதஹபுகளாக புதுப்புது இயக்கங்களை ஆரம்பித்து வருகின்றனர். இயக்கம் ஏன் என்ற கேள்விக்கு “முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். ஒழுக்க சீரழிவில் உள்ளனர். பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் சிறுபான்மையினராக துன்பப்படுகின்றனர். ஆகவே இயக்கம் தேவை” என்று நியாயம் கற்பிக்கின்றனர்.
பொருளாதாரப் புரட்சி
நமது அருமை ரசூல்(ஸலல்) அவர்கள் அன்று நினைத்திருந்தால், மக்கமாநகரில் பொருளாதார திட்டங்களை மக்கள் முன் வைத்து மாபெரும் பொருளாதார புரட்சி ஏற்படுத்தியிருக்கலாம். பொருளாதாரத்தின் பெயரால் மக்களை ஒன்று படுத்தியிருக்கலாம். அதற்கான சூழ்நிலை அங்கு ஏராளமாக இருந்தது. காரணம் குரைஷி தலைவர்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே இருந்தனர். அடிமை வணிகம் பிரபலமாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் கூட இளமையில் ஒரு சில “கீராத்” பணத்துக்கு ஆடு மேய்த்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பொருளாதார பிரச்சினையை முன் வைத்து மக்களை ஒன்றுபடுத்தவில்லை.
சிறுபான்மை சமுதாயம் பாதிக்கப்படுதல்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்கள் அனைவரும் ஏழை எளியவர்களே. பலர் அடிமைகளாக எந்த ஒரு சலுகையும் இல்லாமல் குரைஷி தலைவர்களிடம் அடி பணிந்து வாழ்ந்தவர்கள். பிலால்(ரழி), அம்மார் (ரழி), கப்பாப்(ரழி) ஆகியோர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே பெரும்பான்மை குரைஷிகளிடம் துன்பப்படடனர். “எங்கள் துன்பத்தை நீக்குங்கள்” என்று அம்மார்(ரழி) அவர்கள் கோரியபொழுதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறியது.
“யாசிருடைய குடும்பத்தினரே பொறுங்கள்! சுவர்க்கம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது தான்”.
இந்த உலகில் கிடைக்கும் வெற்றியை எதிர்பார்த்து பெரும்பான்மை குரைஷிகளை உடனுக்குடன் நபி(ஸல்) அவர்கள் எதிர்க்க வில்லை. இறுதிநாளில் கிடைக்கும் வெற்றியை இலக்காய் கொண்டே ஏகத்துவத்தை மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள்.
சமுதாயத்தில் ஒழுக்க சீரழிவு
இன்றைய இஸ்லாமிய மக்களிடமும் நாட்டிலும் ஒழுக்கக் கேடுகள் உச்சகட்டத்தில் உள்ளன. ஆகவே இச்சீர்கேடுகளைக் களைய இயக்கம் அவசியமானது என்றும் சிலர் கூறலாம்.
ஆனால் அருமை ரசூல்(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த மக்கமாநகர் ஒழுக்கக் கேட்டின் உச்சயில் அன்று இருந்தது.” கஃபாவை நிர்வாணமாக தவாஃபு செய்யும் பெண்கள், இன்றைய சிவப்பு விளக்குப் பகுதி என்று கூறுகிறார்களே, அது அன்றே நடைமுறையில் இருந்து வந்தது. அன்றைய அரபு நாட்டின் விபச்சாரிகள் தங்கள் வீடுகளில் சிவப்புக் கொடியை ஏற்றி, நாங்கள் விலைமகள்கள் என்று விளம்படுத்துவார்கள்.
ஒருவனுக்கு பல மனைவியர் இருப்பார்கள். இந்நிலையில் தன் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அவனது புதல்வர்கள் வீட்டிற்கு ஓடுவார்கள். தன்னைப் பெற்ற தாயைத் தவிர்த்து மற்ற தன் தந்தையின் மனைவிகளில் தனக்குப் பிடித்தமான பெண்ணின் ஆடையை தங்களின் தோள்களில் போட்டுக் கொள்வார்கள். யார்யாருக்கு, யாருடைய ஆடை கிடைத்ததோ அப்பெண் அவன் மனைவி. தாயை தாரமாக ஏற்றக் கொள்ளக் கூடிய கேடு கெட்ட சமுதாயமாக அன்றைய சமுதாயம் நிலவியது.
அருமை ரசூல்(ஸல்) அவர்கள் விரும்பியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒழுக்கப் புரட்சி ஒன்றை அங்கு கொண்டு வந்திருக்கலாம். நிச்சயமாக அது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
மனிதர்களை ஒன்றுபடுத்தும் ஏகத்துவம்
ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் மனிதர்களை ஒன்றுபடுத்த கட்சி உண்டாக்குவதற்கும், ஜமாஅத் உண்டாக்குவதற்கும், இயக்கம் உண்டாக்குவதற்குமுரிய எல்ல வழிகளையும் விட்டுவிட்டு, அல்லாஹ்(ஜல்) நபி(ஸல்) அவர்களை தனது வழியில் வளர்த்தெடுக்கின்றான். நபியே! சொல்லுங்கள்,” நான் ஒரு நபி”; அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
இந்த மனித சமுதாயம் ஒன்றுபட வேண்டும். பிறகு எதன் காரணமாகவும் அது வேறுபடக் கூடாது என்பதற்காக ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்திய முதல் சமுதாயத்தை உருவாக்கினார்கள். இப்படி ஒன்றுபடுத்தப்பட்ட சமதாயத்தில் ஸல்மான்(ரழி), ஸுகைபு(ரழி), பிலால்(ரழி) போன்றோர் இருந்தார்கள். அவர்கள் யாரும் உணரவில்லை. நான் பாரசீகத்தை சேர்ந்தவனென்றும், ரோம் நாட்டைச் சேர்ந்தவனென்றும்; ஹபஸ் நாட்டை சேர்ந்தவனென்றும். அவர்கள் அல்லாஹ்வின் அருளால் ஒன்றுபட்ட சகோதரர்களாக ஆகிப் போனார்கள்.
இந்த ஏகத்துவ அடிப்படையில் ஒன்றுபட்ட சமுதாயத்தின் காலடியில் மாபெரும் பேரரசுகள் மண்டியிட்டன. அந்நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து பொருளாதார தளைகளிலிருந்தும் விடுவித்து ஒழுக்கச் சீலர்களாக மாற்றிக் காட்டினார்கள். சகோதரத்துவத்தை நிலை நாட்டினார்கள்.
இஸ்லாம் அவர்களை சகோதரர்களாக்கிய பிறகு எந்த ஆலிமும், எந்த இமாமும், எந்த அறிஞனும் முஸ்லிம்களைப் பிரிப்பதற்கு, அவர்களை துண்டாடுவதற்கு அவர்களைத் தன்பால் அழைப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
ஆதாரம் உண்டா?
நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து எடுத்துச் சொல்லுங்கள். ஒரு இமாம், ஒர் அறிஞர் ஒரு முஜாஹித் ஒருவரையாவது எடுத்துக் காட்டுங்கள்? எங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய ஒருவராவது, அவர் தன்னுடைய பெயரால் அல்லது தான் வைத்த பெயரால், தன்னுடைய லட்சியத்தால், தான் வளர்தத் கொள்கையால ஜமாஅத் என்றும், இயக்கம் என்றும், கழகம் என்றும் உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் யாரும் சுட்டிக் காட்ட முடியாது.
இன்று பெரும்பான்மையான இயக்கங்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்கும், முஸ்லிம்களுக்காகப் போராடுவதற்கும் குர்ஆன், ஹதீஸ் வழிமுறையைக் கைவிட்டு, இஸ்லாம் தூக்கியெறிந்த ஜனநாயக சட்டங்களைத் தூக்கிப் பிடிக்கின்றன. அதனால் இவ்வுலகில் சில நன்மைகளை இவர்கள் பெறக்கூடும்.
ஆனால் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என உளமார ஏற்றுக் கொண்டவர்கள், இறுதி நாளில் கிடைக்கும் வெற்றியை மட்டுமே கவனத்தில் கொள்வர்.ன்இந்த உலகில் அல்லாஹ் இவர்களைக் கொண்டே தன் வாழ்க்கை நெறியை நிலை நாட்டலாம்; அல்லது இவர்கள் ஊட்டும் உணர்வில், காட்டும் தியாகத்தில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையைக் கொண்டும் நிலைநாட்டலாம். அல்லது அவர்கள் தயாரிக்கும் அடுத்த தலை முறையைக் கொண்டும் நிலை நாட்டலாம்.
அனைததும் ஏகன் அல்லாஹ்வின் நாட்டம் குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வதும், பிரச்சாரம் செய்வதும் மட்டுமே நமது பணி! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Dr.U.M.M.Nubar Mohamed Farook, SriLanka

தொழுகை மிகச் சிறந்த யோகா என்பதில் ஐயமில்லை :நாராயண் ஷெட்டி

முஸ்லிம்களின் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாக நேர்த்தியாக கடைபிடிக்கும்போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பலனளிக்கும். யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி அவர்கள் கூறியுள்ளார். தெற்கு கன்னடா பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களபுரம் ஸ்டேட் பேங்க் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. நாராயண் ஷெட்டியின் மாணவர் ஒருவர் யோகா கலையை செய்து காண்பித்தார் அதன் நன்மைகளை நாராயண் ஷெட்டி அவர்கள் தெளிவாக விளக்கினார்
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகளை வெகுவாக பாராட்டினார்.இறுதியில் தியானம் நடைபெற்றது.
அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ர்ண்டின் மாவட்ட தலைவர் அன்வர் சாதாத் அவர்கள் தேசிய அளவில் 16 மாநிலங்களில் இது போன்றதொரு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களியடையே எந்த வேறுபாடுமில்லை அதனை சாதிமதங்கள் பெயரால் மனிதர்கள் தான் உருவாக்கிவிட்டனர். இந்திய சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகளை களைய மன ஆரோக்கியமுள்ள மனிதர்கள் அவசியம். உடல் ஆரோக்கியமுள்ளவர்களுக்கே மன ஆரோக்கியமும் கிட்டும். அந்த வகையில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குறியது, என நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் மாரத்தானை தொடங்கிவைத்தவருமான மங்களபுரம் அலாய்சியஸ் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியை சுட்டிக்காட்டிய அவர் இந்திய கலாச்சாரத்தின் யோகா கலை மற்றும் தியானத்தை பயின்று மருத்துவர்களிடம் செலவளிப்பதை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மாவட்ட அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் இம்தியாஸ் பண்ட்வால் மாவட்ட சேம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

ரோஹிதாக்ஷா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மாரா அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார் ஒருங்கிணைப்பாளராக நசீர் தும்பெ அவர்களும் இஸ்மாயில் மலர் அவர்களின் நன்றியுரை யுடன் இந்த இனிதே நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

வெள்ளி, 12 நவம்பர், 2010

TNS INDIA என்ற அமெரிக்க நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு

20  மாநிலங்களில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனம்  கணக்கெடுப்பை நடத்தியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
புது டெல்லி மும்பை கொல்கத்தா பெங்களுரு மற்றும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு நடந்துள்ளது . அதே சமயத்தில் குஜராத்தை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதுபோன்றதொரு கணக்கெடுப்பு திருவனந்தபுறத்தில் உள்ள கறிமடம் காலனியில் நடைபெற்றது.
இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், "ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?' "நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?' போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற 10 இந்தியா மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படுகிறது . பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே , 130 பேர் சந்திக்கவேண்டிய இலக்கை அவர்கள் அடைய முடியவில்லை
TNS  INDIA  என்ற இந்த நிறுவனத்தின் கிளைகள் புது டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை ஹைதராபாத் அஹ்மதாபாத்  லக்னோ பட்ன புனே மதுர நாக்பூர் பெங்களுரு கொச்சி லூதியான மற்றும் புபநேஷ்வரில் உள்ளது .
எல்லா இடங்களிலும் முஸ்லிம்களை குறிவைத்து இவர்கள் அதிகம் வாழும் இடங்களில் மட்டும் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சுமார் ஆறாயிரம் பேரிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது என்று தெரிகிறது .
உலகம் மற்றும் இந்தியாவின் எதிர்கால போக்கை கணிக்க இந்த கணக்கெடுப்புகள் உதவும் என்று சொல்கிறது TNS .
அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி இந்த நிறுவனம் இச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவருகிறது .
இதனை கண்டித்து பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளா சட்டப்பேரவையை நோக்கி பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்தது .
இதில் அமெரிக்கா விற்கு எதிரான கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது . இத்தகைய கணக்கெடுப்பின் மூலம்  இந்தியா மக்களை மதரீதியில் பிளவு படுத்த அமெரிக்க முயற்சித்து வருவதாக ஆர்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி கோஷங்களை எழுப்ப்பினர்.
அமெரிக்க சார்பில் கணக்கெடுப்பை நடத்திய TNS INDIA நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்

புதன், 27 அக்டோபர், 2010

உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை !

உலகப் புகழ்பெற்ற வோல்கஸ்வோகன் (Volkswagen), ஹெயடல்பெர்க் சிமென்ட் (HeidelbergCement) போன்ற மிக பெரிய ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

சமிபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லீம்களை பற்றி அவதூறு பரப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாகவும் இதை பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி அறிவு பெற்ற ஜனநாயாக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும் வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் வியாபார கொள்கைகள், செயல்திட்ட அமைப்புகளை, இலாபம் ஈட்டும் நடைமுறைகளை உலகில் பல முன்னணி பல்கலைகழகங்கள், கல்லூரிகள் தங்கள் பாட திட்டத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் புகழ்பெற்ற பொருளாதார நாளேடான விர்ட்ஸ்சாட்ஸ்வோசே (Wirtschaftswoche ) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சமுக வலைதளங்கள் மூலம் ஜெர்மனிய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அவற்றின் ரகசிய நிறுவன தகவல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
"முன்பு மின்னஞ்சல் மூலமாக நிறுவனங்களில் பயன்படுத்தும் மென்பொருட்களில் வைரஸ் பரப்பட்டது, ஆனால் தற்போது சமுக வலைதளங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிரல்கள்(add-on applications) முலம் நிறுவனங்களின் மென்பொருளுக்கு ஆபத்து விளைகின்றது", என்று ஜெர்மனியின் புகழ் பெற்ற ஆன்ட்டி-வைரஸ் நிறுவனம் கேஸ்பர்ஸ்கீ (Kaspersky) தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரி கிரிஸ்டியன் ஃபுச்சஸ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு பணிகளின் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதால் இதை தடை செய்துள்ளதாக டைம்ளர் (Daimler) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வலைதளத்தை 500 மில்லியன் (50  கோடி) மக்கள் பயன்படுத்துகிறார்கள்.  அமெரிக்காவில் சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் அலுவகங்களில் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம் இது தான். இது அலுவலக பணிகளின் மின்னஞ்சலை விட அதிகம் பயன்படுத்தபடுகிறது.
ஜெர்மனியில் எடுத்த சர்வேயில் 30 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால் தயாரிப்பு பாதிக்கும் எனவும், 56 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால் பாதுகாப்பு தகவல்கள் திருடப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இலண்டனில் பள்ளி குழந்தைகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் ஒழுக்கக்கேடுகள் அடைவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது
நன்றி இந்நேரம்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது AIMPLB


All India Muslim Personel Law Board Meet
லக்நோ: செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாருல்உலூம் நத்வதுல் உலமா தீர்மானித்துள்ளது . அக்டோபர் 16,2010 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்திற்கு மௌலானா செய்யத் முஹம்மத் ரபி ஹசனி நத்வி அவர்கள் தலைமை தாங்கினார்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று மூத்த வழக்கறிஞர்ஒருவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு , "இத்தீர்ப்பு அனைவரும் ஏற்றுக்கொண்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல் வெறும் ஒரு சார்பாக மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது " என்று பதிலளித்தார் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்வதென்றால் முஸ்லிம்களின் நலன், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலேயே பேச்சுவர்த்தை அமைய வேண்டும் மேலும் பல இடங்களில் உள்ளது போல கோவிலுக்கு அருகிலேயே மஸ்ஜித் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் இங்கு நாம் அனுமதிக்க முடியாது காரணம் இங்கு கோவிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டியதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார் முன்னதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்கள் உ பி சன்னி வக்ப் போர்டு தலைவரை நேரில் சந்தித்தனர். அப்போது வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார் . நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார். முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, இமாம்ஸ் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர். பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்


SQR Ilyas, YH Muchala, Abdur Raheem Qureshi, Zafaryab Jilani, Hamza Hashmi

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் அமைப்பு: ராகுல் காந்தி

Posted: 06 Oct 2010 09:47 PM PDT
போபால்,அக்.7:தடைச் செய்யப்பட்ட சிமி (இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்) யைப்போல்(?) ஆர்.எஸ்.எஸ்ஸும் மதவெறியர்களின் அமைப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இரு அமைப்புகளுக்கு மத அடிப்படைவாத பார்வைகளே உள்ளன என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மதவாத சிந்தனைக் கொண்டவர்களுக்கு இளைஞர் காங்கிரஸில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


ராகுல் காந்தியின் மனோநிலை அரசியல் ரீதியான முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக பா.ஜ.க கூறியுள்ளது. மனோரீதியான நோயைக் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யப்பட்ட சிமி அமைப்புடன் ஒப்பீடுச்செய்ய இயலுமாம், பா.ஜ.க வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகிறார்.


ஆர்.எஸ்.எஸ் தேசிய உணர்வுக் கொண்ட(?) அமைப்பு என்றும், சிமி தடைச்செய்யப்பட்ட அமைப்பாகும் எனவும் ஜவேத்கர் தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சனி, 2 அக்டோபர், 2010

இளமை காக்கும் தலை மை

இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

தலைக்குச் சாயம் (Hair Dye)
சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

ஷாம்பூ (Shampoo)
அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

வழுக்கை (Baldness)

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்

நல்லெண்ணெய் 1 லிட்டர்

கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்

நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்

பசுவின்பால் 4 லிட்டர்

அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.

பேன் (Tics)
சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.

பொடுகு (Dandruff)
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)

பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது

முழங்கை வலி

"சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை. முழங் கையிலை ஒரே வலி" என்றாள் வேதனை யுடன் ஒரு பெண்மணி.

"பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல் களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'." என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத் தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல் களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவ துண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதி யில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களி லும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்த கைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோ தித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண் டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -
ஆதாரம்:- American Academy of Family Physicians

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
 thanks toசுரேஷ் குமார்

புதன், 29 செப்டம்பர், 2010

மருத்துவம் பகுதி 1

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!

உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!


இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?

துன்பம் தரும் தும்மல்

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?

தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?

அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?
கருச்சிதவைத் தடுக ்க:

பற்களின் ஆரோக்கியம்

பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?

அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?
பொவாக பதினெட்டு வயது முதல் இருபத்தந்து வயதுக்குள் ஞானப்பல்முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது கடவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும்.


ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது.சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.

இதனால் எல்லாம் பிரச்னை இல்லை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்று நோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்து உங்களுக்குப் பிரச்னயை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கி விடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.


 துன்பம் தரும் தும்மல்

அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் பல நோய்களுக்கு ஒவ்வாமை எனப்படும்அலர்ஜிதான் காரணம். தினந்தோறும் பயன்படுத்தப்படும் பலவகையான சோப்பு, பவுடர், பேஸ்ட், வாசனைப் பொருட்கள், எண்ணெய், சாக்ஸ், ஆடைகள், அணிகலன்கள் போன்ற பொருட்கள் முதல் தும்பு, தூசிகள், நெடி, உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள், சாதாரண தலைவலி மாத்திரைகள் போன்றவை வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கக்கூடும்.


இதன் காரணமாகவும், நாளுக்குநாள் அதிகரித்துவரும் தொழிற்சாலைக் கழிவு, சுற்றுச்சூழல்கேடுபோன்றவற்றாலும், அலர்ஜியைப் பற்றிஅதிகமாகத் தெரிந்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மைக் காலமாக நம் மக்களிடையே அதிகரித்துவருகிறது.


அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால்உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.


உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.


தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.


பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.


தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?
இந்த முக்கிய அறிகுறிகளக் கொண்டு தும்மல் நோயை அலர்ஜியால் வரும்தும்மல்நோய், அலர்ஜி இல்லாமல் வரும்தும்மல்நோய் மற்றும் வேறு காரணங்களால் வரும் தும்மல்நோய் என்று இலண்டனில் 1994 ஆம் வருடக் கருத்தரங்கில் இந்த நோயைப் பிரித்துஅணுகி, ஆராயவேண்டும் என்றுபரிந்துரைக்கப்பட்ட.து இதன் அடிப்படயில் தும்மல் நோய் பலவகப்படுகின்றது.


அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

பொதுவாக பெரும்பாலான சமயங்களில் பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத் துகள்களினாலேயே இத்தும்மல் நோய் ஏற்படுகின்றது.பல்வேறு மகரந்தத்துகள்கள், பல்வேறு காலங்களில், பல இடங்களுக்குக் காற்றில் பரவுவதால் இத்தும்மல் நோய் உண்டாகின்றது.
எனவே, ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் உதாரணமாகபனி, பூ பூக்கும் காலங்களில்மட்டும் இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் தும்மிக்கொண்டே இருப்பார்கள்.

வருடத்தின் மற்றமாதங்களில் இந்நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலேயே இருக்கும். எனவேதான் இது ஒவ்வாமை பருவக் கால மூக்கழற்சி நோய் (Allergic SeasonalRhinitis) என்றழைக்கப்படுகின்றது. இத்தும்மல் நோய் பெரும்பாலும் இளவயதிலேயேஆரம்பிக்கும். சிறுவர்கள் இளைஞர்கள், இளம் பெண்களேநடுத்தர மற்றும் வயதானவர்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இளங்காலை அல்லது விடியற்காலை மற்றும் மாலை வேளைகளில் காற்றில் மகரந்தத்துகள்களின் அளவு அதிகம் இருப்பதால் இவ்வகையான மூக்கு அலர்ஜி இருப்பவர்களில் பெரும்பாலோர் படுக்கையிலிருந்து எழுந்து குளித்து முடிக்கும் காலம் வரை பல மணித்துளிகளுக்குத் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார்கள்.

குறைந்தது 50 முதல் 100 தும்மலாவது தொடர்ந்து தும்முவார்கள். பின்புநல்ல வெயில் வந்தவுடன் வழக்கம்போல் எந்த பாதிப்புமின்றி தங்கள் பணிகளைச் செய்வார்கள்.இது மிதமான தும்மல்நோய் ஆகும்.

இந்நோயால் துன்புறும் சிலரின் மூக்கில் கடுமையான எரிச்சல் அல்லஅரிப்பு இருந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில், வாயின் மேற்புறத்தில் உள்ள அன்னச்சதையும் எரியும். அல்லது அங்குநமைச்சல் ஏற்படும்.

எனவே நாக்கைக் கொண்டு அவ்வப்போது மேல் அன்னத்தைத் தடவிக் கொண்டோஅல்ல சப்புக் கொட்டிக் கொண்டோ இருப்பார்கள்.

பல சமயங்களில் தொண்டையும் எரியும். இவற்றைத் தொடர்ந்து பலமானதொடர் தும்மல்கள் ஏற்படும். தும்மித்தும்மித் துவண்டு விடுவதுமுண்டு. மூக்கிலிருநது; வெறும் நீர் வடிந்தவண்ணம் இருக்கும். கண்களிலும்அதன் ஓரங்களிலும் அதிக நமைச்சலுடன் கூடிய ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கண்களில் நீர் தேங்கி நின்று, கண்கள் வீங்கிச்சிவந்துவிடும்.


சிலர் வருடம் முழுவம் தும்மல் நோயால் துன்பப்படுவார்கள். அவர்களின்மூக்கு எந்நேரமும் அடைப்பட்டிருப்பதால் இவர்கள் வாய் திறந்தபடியே மூச்சுவிடுவார்கள்.இரவு நேரங்களில் உற்பத்தியாகும் சளி தொண்டைக்கும் இறங்குவதாலும், எந்நேரமும், மூக்கு அடைபட்டுக் கிடப்பதாலும், இவர்கள் தூங்கும்போது குறட்டைச் சத்தமும் கேட்கும்.

தொண்டைக்குள் சளி அடைப்பதால் அவ்வப்போது தூக்கமும் கெட்டு, எழுந்து உட்கார்ந்து, சளியைத் துப்பியபின்பு, சிறிது நிவாரணம் பெறுவார்கள்.

பகல் நேரங்களில்தொண்டையில் சளி சேர்வதால், தொண்டைக்கும், காதுக்கும் இடையே உள்ள காற்றைச் சமன்படுத்தஉதவும். உட்செவிக் குழல் Eustachian tube)) அடைத்துக் கொண்டு காதும் சரிவர கேட்க முடியாமல்போய்விடும். எனவே அவ்வப்போது வாயைத் திறந்து திறந்து மூடுவார்கள். இதனால் காது கேட்கும் திறன் சற்றுக் கூடுதலாகும்.


இந்நோய்க்கான முறையான சிகிச்சயை மேற்கொள்ளாவிடில் காற்றறைகளிலும், நடுக்காதுகளில் சளித் தேங்கி Allergic மற்றும் இது போன்ற நோய்கள் ஏற்பட்டு தலைவலி, காதுகளில் சீழ்வடிதல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதுடன் சிலர் இருமலாலும், தோல் தடிப்பாலும் ஆஸ்துமா இழுப்பாலும் கஷ்ட்டப்படுவார்கள்.


இலேசான குளிர்காற்று,பனி, வெயில், தூசி,புகை, விரல்கள் போன்றன மூக்கில்பட்டாலே முன்பு சொன்ன அனைத் அறிகுறிகளும் படிப்படியாகக் காலை நேரங்களில் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் ஆரம்பித்த பின்பு நாட்கள்,வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் தொடர்நது நீடிக்கும்.

இவ்வகையான தும்மல் நோய்க்கு வருடம் முழுவதும் இருக்கும் அலர்ஜித் தும்மல்நோய் Perennial allergicrhinitis என்று பெயர்.எனவே இந்நிலை ஏற்படாமல் இருக்க முதலிலேயே தங்கள் குடும்ப மருத்துவரின் வழியாக நல்ல அலர்ஜி ஆஸ்த்மா சிறப்பு மருத்துவரின் ஆலோசனப் பெறுவதே நல்லதாகும்.

இந்நோய்க்கு என்னென்ன பரிசோதனகள் முக்கியமாகச் செய்யவேண்டும்?

பொதுவாக அலர்ஜிப் பிணியாளர்கள் கூறும் நோய்க்குறி குணங்களைக் கொண்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

தும்மல் நோயைப் பொறுத்தவரை நோய் தோன்றியவிதம், இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், எந்தெந்த மாதங்களில் நோய் தீவிரமடைகிறது, வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள், மரம்,செடிகள் உள்ளனவா, சாதாரண ஜலதோஷத்திலிருநது இவ்வகையான தும்மல் நோய் எவ்வாறு வேறுபடுகின்றது, எந்தச் சீதோஷ்ண நிலைகளில் இந்நோய் குறைகிறது,

இதனுடன் மற்ற அலர்ஜி நோய்களாலும் துன்புறுகின்றனரா, பெற்றோர்கள் மற்றும் அவர்கள் வழி வந்தவர்கள்ஆஸ்துமா, கரப்பான், தோல் அலர்ஜி தொடர்பான நோய்க்குக் குணங்களக் கொண்டிருக்கின்றனரா, அவர்கள் செய்யும்தொழில் என்ன என்பது போன்ற மிகவும் விரிவாக Care history மேற்கொள்ளப் படவேண்டும்.


மூக்குச்சளிச் சோதனை,சாதாரண இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர், மலம்,சைனஸ், மார்பு எக்ஸ்ரே போன்ற ENT பரிசோதனகளுடன் முக்கியமான தோல் அலர்ஜி டெஸ்டுகளையும் செய்ய வேண்டும்.

பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத்துகள் அடங்கிய வெவ்வேறு வகையான, இதற்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ள கரைசல்களில் ஒரே ஒரு துளியை எடுத்து தோலின் மேலோட்டமாக வலியேதும் இன்றிச் செய்யப்படும் இவ்வகையான modified prick allergens test மூலமாகத் துல்லியமாகத் தும்மல் நோய்க்கான காரணங்களை அறியலாம். இதை முறையுடன் அலர்ஜி ஆஸதுமா சிறப்பு மருத்துவரின் முதலுதவி வசதிகள் கொண்ட மருத்துவமனையிலேயே செய்து கொள்வது மிக மிக முக்கியம்.


முக்கியமான சிகிச்சை மற்றும் தவிர்க்கும் வழிகள் என்னென்ன?
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடi;டகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்
.

இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனத்துவகைத் தும்மல் நோய்களை முழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது. Oral nonsedative antihistamine H2 blockers மாத்திரைகள் போன்றவை தற்காலிக நிவாரணம் தந்தாலும், தும்மல் நோய்க்கான மூல காரணங்களுக்கு முறையாக சிகிச்சை மேற்கொள்வது நீண்டகால அல்ல முழுமயான சிகிச்சை முறையாகும்.


பனி, பூ பூக்கும்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வருவது, பிரயாணங்கள், தோட்டப்பணிகள் போன்றன கட்டாயம் தவிர்க்கப் படவேண்டும். குறிப்பாக, அலர்ஜி தன்மையுடய சிறுவர் காலையிலும், மாலையிலும் வெளியேநீண்ட நேரம் விளயாடுவதைக் குறைத்தல் நல்லது.

படுக்கை அறையில் ஜன்னல்கள் இதுபோன்ற காலங்களில் மூடி இருப்பதே பயன் தரும். குறைந்த பொருட்களுடன் கூடிய படுக்கை அறையே இவர்களுக்குக் குதூகலத்தைக் கொடுக்கக்கூடியது வீட்டைச் சுற்றி புல், பூண்டுகள், பூந்தோட்டம், மரம்,செடிகொடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்வதே இவர்களைப் பொறுத்தவரை சுகமளிக்கக்கூடியது. சுகாதாரமானது.


முள்ளங்கி:கருச்சிதவைத் தடுக்க -
ஆண்மை சிறப்பாகச் செயல்பட.


காய்கறிகளை சமையலுக்குத் தேர்வு செய்யும்போது, எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாகவும் எங்கும்கிடைக்கக் கூடியதாகவும், சத்துக்கள்நிறைந்ததாகவும் விலை மலிவானதாகவும் உள்ளதைத் தேர்ந்தெடுத்து, அன்றாடம் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.இக்காய்களில் மருத்துவக் குணம் நிறைந்தவற்றைப் பார்த்து வாங்கினால், பல நன்மைகளை அடைய முடியும். அவ்வாறு தேர்வுசெய்ததில் ஒன்றுதான் முள்ளங்கி.


இந்த முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகியவற்றில்மருத்துவ குணங்களும்; உடலைப் பாதுகாக்கும் சத்துப்பொருள்களும் அடங்கியுள்ளன.
முள்ளங்கியில், சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கி வெப்ப வீரியமும் கார்ப்புச் சுவையும் கொண்டதாகும்.


மருத்துவ குணங்கள்: முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கிதான் மருத்துவகுணங்கள் அதிகம் உடையதாகும். முள்ளங்கியில் புரதம், கொழுப்பு, மணிச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன.
உயிர்ச்சத்துக்களான, கரோட்டிண், பி.1,ரிபோபிளேவின், நியாசின், சி. வைட்டமின்களும், மெக்னீஷியம், செம்பு, மேங்கனீஸ், ஜின்க், குரோமியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.


என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?
முள்ளங்கியைத் தினமும் சாப்பிடலாம். உணவு நல்ல முறையில் செரிமானம்ஆக உதவுகிற.து குடலில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கிறது குடல் சம்மந்தமான அனைத்துக் கோளாறுகளயும் போக்குகிறது.

மூலக் கடுப்பிற்குச் சிறந்த நிவாரணமளிக்கிறது வயிற்று வலியைக் குணப்படுத்கிறது. வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குணமாக்குகிறது. இருமல், கபம்,ஜலதோஷம், தலைவலி, பல்நோய்கள் நிவர்த்தியாகிறது குன்மம் சுவாசம், குடல்விருத்தி நோய், வாதநோய் கரப்பான் நோய் நீங்க பெரிதும் பயன்படுகிறது.

விந்து உற்பத்திக்கு: கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள்; இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறவதை உணர முடியும்.

உணவில் முள்ளங்கியைச் சமைத்துச் சாப்பிடுவதால் கண்களுக்குத் தெளிவான பார்வை கிடைக்கிறது ஆண்களின் விந்து கூடுதலாக உற்பத்தியாகிறது.

பிஞ்சு முள்ளங்கியை வாங்கிச் சுத்தம் செய்து சாறு தயாரித்துச் சாப்பிட்டுவந்தால், நீர்க் கடுப்பு நீங்கும்.குடற் புண்கள் நிவர்த்தியாகும். பிஞ்சு முள்ளங்கியில் அயோடின், சிலிக்கான் ஆகியவை சேர்வதற்கு மிகவும் பயனுள்ளதாகும்.


கருச்சிதவைத் தடுக்க:
அடிக்கடி கருச்சிதைவுக்கு உள்ளாகும் பெண்கள் முள்ளங்கிச் சாறு 100 மில்லியில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கருப்பை பலம்பெற்றுக் கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.


முள்ளங்கிச் சாற்றைச் சாப்பிடுவதால் மூட்டு வலி குறைகிறது.
எலும்புச்சிதைவு ஏற்படாமல் பாகாக்கிறது.


பொடுகு நீங்க: முள்ளங்கிச்சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து தலைக்குத் தேய்த்து வைத்திருநது, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும். குளிக்கும்போது, பேன்கள் வெளியேறி விடும்.


உணவு செரிமானத்திற்கு:முள்ளங்கி விதையை இதன் எடைக்கு எட்டுப் பங்குத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உணவை மிக விரவில் செரிமானமாக்க உதவும்.

தாது விருத்திக்கு: முள்ளங்கி விதையை நன்கு பொடித்து வைத்துக் கொண்டு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்துக் குழைத்துச்சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்குச் சக்தியளித்து ஆண்மை சிறப்பாகச் செயல்படும். போக சக்தி நீடிக்கும். முள்ளங்கி விதையப் பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது விருத்தி அதிகமாகும்.


முள்ளங்கி விதையப் பொடி செய்து சம அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை கால் கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், சுக்கில இழப்பு சரிசெய்யப்பட்டு, தாது விருத்திக் கூடுதலாகும்.


முள்ளங்கி விதைய ஒரு தேக்கரண்டியளவு தூள் செய்து தண்ணீரில் கலந்துகாலல, மாலை குடித்து வந்தால் கடுமையான வெடi;டநோய் குணமாகும்.மருநது; சாப்பிடும்போது பேதி அதிகமானால், மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


சிறுநீர்ப் பையில் அழற்சியும் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு உள்ளவர்கள் முள்ளங்கிச் சாறு100 மில்லியளவு தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சிறுநீர் தாராளமாகவும் எரிச்சல் இல்லாமலும் பிரியும். மேகநோய் தொடர்பான உடல் காங்கை தீரும்.


நீரிழிவைக் கட்டுப்படுத்த: பிஞ்சு முள்ளங்கியைத் தேங்காய் திருகுவது போல் திருகி, நிழலில் உலர்த்தி பொடித்து, இதில் தேவையான அளவுநெய், தேன், கற்கண்டு சேர்தது; லேகிய பதத்தில் தயாரித்து வைத்துக் கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவுநோய் கட்டுப்படும்.

முள்ளங்கி விதையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தால் குடல்வாதம் நீங்கும்.


பற்களின் ஆரோக்கியம்
உடம்புக்கு முடியவில்லைன்னு டாக்டரிடம் போனால், அவர் முதலில் வாயைத்திற என்பார். பற்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வார். அடுத்து நாக்கை நீட்டு என்பார். ஒருவரின் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாக இருப்பது பற்களும், நாக்கும்தான்.



நம் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற கருத்து பழங்காலம் முதலே இருந்து வருகிறது. இவ்வளவு முக்கியமான பாகங்களான பற்களுக்கு, நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.


காலை எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்தில் அறைகுறையாகப் பல் விலக்குவது, நாள் முழுவதும் நொறுக்குத் தீனி, இரவு பிரஷ் செய்யாமல் படுப்பது போன்றது பற்களின் ஆரோக்கியத்துக்குச் செய்யக்கூடாத விஷயங்களைச் செய்து வருகிறோம். பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இருதயம் உட்பட மற்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.


பல் சுத்தமாக இல்லாவிட்டால், உணவை உட்கொள்ளும்போது,அசுத்தப் பற்களில் இருக்கும் கிருமிகளும் உள்ளே செல்கின்றன. உள்ளே சென்று இரைப்பையையும், சிறுகுடலையும் அடைந்து, உணவைக் கெடுத்து, புளிக்கச் செய்து அஜீரணத்தை எளிதாக உண்டாக்குகிறது.


மேலும் உள்நாக்கையும்,மூக்கையும், காதுகளையும், நுரையீரல்களையும் இந்தக் கிருமிகள் அடைந்து அந்த அங்கங்களில் நோயை உண்டாக்குகின்றன.

ஒருவனுக்குச் சொத்தைப் பற்கள் இருந்தால், அவன் சுவாசிக்கும் காற்று, அப்பற்களிலுள்ள கெட்ட வாயுக்களோடு நிறயைக்கலந்து உள்ளே செல்கிறது. இந்த கெட்ட வாயு ரத்தத்தோடு கலந்து அனைத்து அங்கங்களுக்கும் கெடுதல் ஏற்படுத்தி விடுகிறது. அதனால் குறிப்பிட்ட ஒரு நோய்க்குத் தீவிர சிகிச்சை அளித்து பலனில்லையெனில், பல் மருத்துவரை அணுகும்படி டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.


வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சரும நோய், தலைவலி இவற்றுக்கும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு.

பற்களின் ஆரோக்கியம் என்றால் சொத்தைப் பற்கள் இல்லாமல், கிருமிகள் வளர வழியில்லாமல் சுத்தமாகப் பராமரித்து வருவதும், h.றுகளில் சீழ் இல்லாமல் பராமரித்து வருவதே பற்களின் ஆரோக்கியமாகக் கருதுகிறோம்.

ஒரு பல் அழியத் தொடங்கினால், பக்கத்துப் பல்லும் விரைவில் அழியும்.

ஒரு கூடை மாம்பழங்களில்ஒரு பழம் அழுகியிருந்தால், அதைச் சுற்றியுள்ள மற்றப் பழங்களும் சீக்கிரம் அழுகிப்போகும் இல்லயா?

பற்களின் தன்மையும் இதுவே. அதனால் ஒரு பல்லில் பிரச்னயிருந்தால், அந்த நோய்க் கிருமி அடுத்த பல்லைத் தாக்கும் முன்பு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைய எடுத்துக்கொள்வது நல்ல.து பல்நோய்க்கு ஆளானவர்களை நினைக்கும் போது இரக்கம் ஏற்பட்டாலும் அவர்களுடைய தவறுகள நினக்கும்போது கோபம் வரும்.

அவர்களுடய அலட்சியமான பராமரிப்பாலும், கெட்ட பழக்கங்களினாலும் மட்டுமே பல் நோய்க்குஅவர்கள் ஆளாகிறார்கள்.


பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?


Flourideகலக்கப்பட்டுள்ள பற்பசையக் கொண்டு மிருதுவான பிரஷ்ஷினால் பல் துலக்குவதே சரியான முறை. பிரஷ்ஷினால் ஒரு முறையில் இரண்டு பற்களை மட்டுமே சுத்தம் செய்ய முடியும். எனவே அடிக்கடி திசைகள மாற்றியபடி பல் துலக்க வேண்டும்.


குறைந்த ஐந்து நிமிடம் பல் துலக்கினால் மட்டுமே பற்களில் படிந்துள்ளகிருமிகள் நீங்கும். இந்தக் கிருமிகள் அதிகப்படியாக உருவாவதற்குக் காரணம், இரவில் பல் துலக்காமல் உறங்கச் செல்வதான். இரவு உணவு உண்டபின் பல் துலக்காமல் படுக்கைக்குச் செல்வதால் பற்களில் அகப்பட்டிருந்த உணவு பொருட்கள் பாக்டீரியாக்களாக உருமாறி ஒரு வித அமிலத்தை வெளியிடுகிறது. இந்த அமிலம்பற்களின் எனாமலைப் பாதிக்கும்.

எனவே ஆரோக்கியத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பற்களைச் சுத்தம்செய்ய இரவில் இரண்டு நிமிடம் ஒதுக்க முடியாதா என்ன? சிறு குழந்தகளை, சிறு வயதிலிருந்தே இரண்டு வேளை பல் துலக்கவும் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கவும் பழக்கிவிடுங்கள்.

எலுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழவகைகள் பற்களின் ஆரோக்கியத்துக்கு நல்ல. உணவு உண்டபின் இந்த பழவகைகளில் ஒன்றைச் சாப்பிட வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


இந்த பழங்கள் நார்சத்தை அளித்து உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்துபற்களில் உணவினால் படிந்திருக்கும் சர்க்கரையைக் கரையச் செய்கிறது. சர்க்கரை அயிட்டங்கள் பற்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.


சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம்,ஜெல்லி, இனிப்புகள் போன்றவற்றை, குறைவான அளவில் எடுத்க்துகொள்ள வேண்டும்.இனிப்பு வகைகளத் தனியாக எடுத்துக் கொள்ளாமல் உணவு உண்ணும்போது எடுத்துக் கொள்ளலாம்.சாப்பாடு கடித்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரக்கப்படுவதால் சர்க்கரையும் இதில் கரைந்து விடும்.


எனவேதான் இனிப்பு உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் ;. இறைச்சி, பால், காய்கறிகள், கீரைவகைகள், விதைகள் இவை பற்களுக்கு நன்மை தரக் கூடிய உணவுப்பொருட்கள். எனவே, இவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

BadBreath:: சிலர் பேசினாலே துர்நாற்றம் ஏற்படும். இது பற்களின் பராமரிப்பைக்காட்டிலும் நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் ஏற்படும் துர்நாற்றம். இரவிலும், காலையிலும் நாக்கை அதற்கான ஸ்க்ரேபர் பயன்படுத்தி சுத்தம் செய்தால் நாள் முழுவதும் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


பல் துலக்கும் பிரஷ்ஷை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு வருஷமாக ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.பிரஷ்ஷின் ஷேப் மாறத் தொடங்கும் முன்பு மாற்றிவிட வேண்டும். ஒவ்வொரு முறை சளி, காய்ச்சல் வநது; சரியான பின்பு பிரஷ்ஷ மாற்ற மறநதுவிடாதீர்கள்.


சிறு குழந்தைகளுக்குப் புட்டிப் பால் கொடுத்தவுடன் பற்களை ஈரத்துணியால் துடைத்துவிடுங்கள். புட்டிப்பால் கொடுத்துவிட்டு அப்படியே உறங்க வைப்பது நல்லதல்ல. சிறு குழந்தகள் சாக்லெட்டுகளஅதிகம் விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால்,சாக்லெட்டு சாப்பிட்டவுடன் பழ வகைகள் ஏதாவது ஒன்று சாப்பிடக் கொடுத்தால் பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கும் சாக்லெட் விடுபட்டுவிடும்.


காலை, இரவு இருநேரமும் பல் துலக்குவதை பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே பல் நோய்களிலிருந்து விடுபடமுடியும்.

அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சாதாரண உப்பு எது அயோடின் கலந்த உப்பு எது என்ற வித்தியாசத்தக்கண்டுபிடிப்பது எப்படி? பலன்களில் வித்தியாசம் உண்டா?

யூனிசெப் நிறுவனம் அயோடின் உப்புச் சாப்பிட வேண்டியதின் அவசியத்தைஎடுத்துச் சொல்ல ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறது. இனி அந்தப் புத்தகத்திலிருந்து...

• சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவில் அயோடின்சத்துள்ள கூட்டுப் பொருள் கலந்து தயாரிக்கப்படும் உப்பு அயோடைஸ்டு உப்பு என்று அழைக்கப்படுகிறது.


இதன் தோற்றம், மணம், சுவை அனத்திலும் சாதாரண உப்புப் போலவே இருக்கும்.இதை உணவுடன் கலந்து சாப்பிடும்போது 150 மைக்ரோ கிராம்அல்ல 15 பி.பி.எம். அயோடின்கிடக்கும்.

அயோடின் பற்றாக்குறையினால் நமக்குப் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
• கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு, குறைப்பிரசவம், குழந்தை ஊனமாகப் பிறப்பு, இறந்து பிறப்பது போன்ற விளவுகள் ஏற்படுகின்றன.குழந்தைப் பருவத்தில் அயோடின் குறைவாய் இருந்தால் முன்கழுத்து தவிர, பல (ஹபோ தராஸ்டிஸம்) ஏற்படுகிறது. அறிவுக்குறைபாடுகள் தோன்றவும் காரணமாகிறது.


• சமவெளியில் வசிக்கும் மக்களை விட, மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்குஅயோடின் பற்றாக்குறை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இனிமேல் நீங்கள் கடைக்குப் போய் உப்பு வாங்குவதாக இருந்தால், அது அயோடின் கலந்த உப்புதானா என்று பார்த்துவாங்குங்கள்.

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு குறிப்பு :
நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது
1. சர்க்கரை நோயாளிகள்பத்தில் இரண்டு பேர் டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
2. ஆரம்ப காலத்தில் இந்தநோய்க்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இருப்பதில்ல.
3. சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும், நாளடைவில் அது பார்வை இழக்கும்படிச் செய்யும்.
4. இன்று கண் பார்வை இழப்பதற்குச் சர்க்கரை நோய் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
5. சர்க்கரை நோய் நல்லகட்டுப்பாட்டில் இருந்தாலும், கண் பார்வையில்பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது.
6. முறையான திட்டமிட்டபரிசோதனகள் மூலமும் தக்க சமயத்தில் சிகிச்சையும் எடுத்தால், கண் பார்வையச் சீரமைக்கலாம்.

7. லேசர் சிகிச்சை மூலம்பலருக்குப் பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
8. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடந்தோறும் முழுமையான கண் பரிசோதனை செயது கொள்ள வேண்டும்.
9. அநேகமாக அனைவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெடினோபதி கண்டறியப்பட்டால், நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வை பாதுகாக்கப்படலாம்.


டயாபெடிஸ் மெலிடஸ் எனும் சர்க்கரை வியாதியானது நம் உடலில் சர்க்கரைசேமிப்பையும் மற்றும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்கிறது

சர்க்கரை வியாதியானது கண்களில் ஏற்படும் புரை (காட்ராக்ட்), க்ளகோமா, குறிப்பாக கண்ணின் உள்ளே உள்ள இரத்தக்குழாய்களைச் சிதைத்தல் போன்றவற்றுக்கும் காரணமாகிறது. இதன் காரணமாக நமது பார்வையப் பாதிக்கிறது.


விழித்திரை (ரெடினா) என்பது என்ன?
'விழித்திரை என்பதுபோட்டோ கேமராவினுள் இருக்கும் ஃபிலிமைப் போன்றது. விழித்திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று, பார்வை நரம்புவழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது."
விழித்திரையின் மையப்பகுதியில் உள்ள மாக்குலா (Macula) நுட்பமான பார்வைக்கு அவசியமான பகுதியாகும்.'

டயபீடிக் ரெட்டினோபதி என்றால் என்ன?
'சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணில் விழித்திரையில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் டயபீடிக் ரெட்டினோபதி எனப்படும்.'

டயபீடிக் ரெட்டினோபதி யாருக்கு அதிகமாக வருகிறது?
'நீரிழிவு வியாதியுள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு வியாதியுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது.நீரிழிவு உள்ளவர்களில் பாதி பேர், அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு, டயபீடிக்ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.'

டயபீடிக் ரெட்டினோபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது?
'இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய இரத்தக் குழாய்களில், மக்ரோ ஆன்ஜியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது இதனால் இரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு, விழித்திரை (ரெட்டினா) வீக்கம் அடைகிறது.

இந்தக் கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடினக் கசிவு, (Hard exudated எனப்படும் லப்போ புரோட்டீன் வஸ்துகளயும் சேமித்து வைக்கிறது. இந்தக் கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களப் பார்த்தல் கடினமாகும்.'


வேறு ஏதேனும் மாற்றங்கள் டயபீடிக் ரெடினோபதியில் உள்ளனவா?
'டயபீடிக் ரெடினோபதியில் சிறிய இரத்த நாளங்கள் மூடப்படுவதால், விழித்திரைக்கு இரத்த ஓட்டம் குறந்து ரெட்டினல் இஸ்கீமியா ஏற்படுகின்றது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, ரெடினா புதிய இரத்த நாளங்கள உருவாக்க முயலுகிறது.இந்த இரத்த நாளங்கள் வழக்கத்திற்கு மாறாக இரத்தகுழாய்கள் எளிதில் உடையக்கூடியது மற்றும் இலகுவாக இரத்த ஒழுக்கினை ஏற்படுத்தும் வகையில் உள்ளவை.

இந்த இரத்த ஒழுக்கு விழித்திரைக்கும் விட்ரியஸ் ஜெல்லுக்குள்ளேயும் ஏற்படலாம். அந்நிலை விட்ரியஸ் இரத்த ஒழுக்கு எனப்படும். இந்த இரத்த ஒழுக்கு தானாகவே சரியாகலாம். அல்லது மீண்டும் மீண்டும் நேரிடலாம். சில நேரங்களில், அடிக்கடி இரத்த ஒழுக்கு நேரிடலாம். இந்த இரத்தநாளங்கள், உடைந்து ரத்தம் கசியும்வரை எந்தவித பாதிப்பயும் ஏற்படுத்தாது.

இதனால் நோயாளிக்குச் சர்க்கரை வியாதியினால் கண் நோய் இருப்பதேதெரியாது. கண்ணில் இரத்தக்கசிவு திடீரென ஏற்படலாம்.

குனிந்து பாத அணிகள அணியும்போதோ, இருமலின் போதோ, மூச்சப் பிடித்துக் கொண்டு எதையாவது தூக்கும்போதோ இந்த இரத்த நாளங்கள் உடையலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், லேசர் சிகிச்சயானது இந்த இரத்தக் கசிவு ஏற்படும் முன்னரே செய்தால் இந்த இரத்தக் கசிவைத் தவிர்க்கலாம். இரத்தக் கசிவு ஏற்பட்டபின், லேசர் சிகிச்சை செய்வது கடினம்.'


ரத்தக்கசிவு ஏற்படும் முன்னரே நோயின் அறிகுறி இல்லாதநோயாளி எவ்வாறு மருத்துவரை அணுக முடியும்?
'இதனாலேயே கண் மருததுவர்கள்சர்க்கரை வியாதி நோயாளிகளை அவ்வப்போது கண் பரிசோதன செய்யுமாறு வலியுறுத்கின்றனர். கண்ணில்மருந்து விட்டு பாப்பாவை விரியவத்து ரெடினாவை பரிசோதனை செய்தால், புது இரத்த நாளங்கள் இருப்பதை கண் மருத்துவரால் அறிந்து கொள்ள முடியும்.


மேலும் லேசர் சிகிச்சையச் சரியான நேரத்தில் அளித்து ரத்தக் கசிவு, பார்வைக் குறைவு மற்றும் ரெடினல் டிடேச்மேண்டதவிர்க்க முடியும். ரத்தக்கசிவு ஏற்பட்ட பின்னர் ஓய்வாக இருந்தால் ஒரு சிலருக்கு ரத்தம் தானாக கரையக்கூடும்.


இரத்தம் கரையாவிட்டால்,மைக்ரோ சர்ஜரியின் மூலம் இந்த ரத்தக் கசிவை அகற்றலாம். இந்த அறுவை சிகிச்சையின்மூலம் ரெட்டினல் டிடேச்மேண்டயும் சரி செய்யலாம். ஆனால் இரத்தக் கசிவு ஏற்படும் முன்னரேLaserTreatment மூலம் தடுத்தல் நல்லது. இதனால் பார்வைக் குறையும் அபாயத்தையும் Retinal Detachment போன்ற நோயின் இறுதிக் கட்டத்தயும் தடுக்கமுடியும்.

சரியான நேரத்தில் லேசர் சிகிச்சை செய்கொள்ள, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் அவ்வப்போது கண்மருத்துவரை அணுகுதல் நன்று. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், கண் நோயை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால்அபாயகரமான கட்டத்தை அடைவதைத் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.


ரத்தக் கொதிப்பு, நீரிழிவுநோயினால் வரும் சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிப்பதால், கண் நோய் விரைவாக மோசமாகாமல் தவிர்க்கலாம்.நீரிழிவு நோயுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கண் நோய் விரைவில் மோசமடைந்து பார்வைப் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்தப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகுதல் அவசியம்.


டயபீடிக் ரெட்டினோபதி,சரியான சிகிச்சை செய்யாவிட்டால் முழுதாகப் பார்வைப் பறிபோகும் அபாயம் உள்ள நோய்.அதே சமயம், சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தி அவ்வப்போது கண் மருத்துவரை அணுகி ரெட்டினா பரிசோதன செய்து அவருடைய ஆலோசனப்படி நடந்தால், பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.


இந்த இரத்த ஒழுக்கு நீடித்தால் ஒரு நிலையிலிருநது; வேறு நிலைக்கு மாற்றப்பட்டு ஃபப்ரோவாஸ்குலர்ப்ராலிபரேஷன் எனும் இழை போன்ற திசுக்கள உருவாக்குகிறது.இவை விழித்திரையுடன் இணந்துபின்னர் இழுத்து விழித்திரை பிரிதலை ஏற்படுத்கிற.து இது தசைப் பரப்பிழுப்பு விழித்திரைபிரிதல் (TractionRetinal Detachment - TRD) எனப்படும்.'


டயபீடிக் ரெட்டினோபதியில் பார்வை எவ்வாறு பாதிப்படைகிறது?
'மாக்குலாவில் Macula (ரெடினல்இடிமா (Edema)உருவாகும் போதும், தசைப் பரப்பிழுப்புவிழித்திரை பிரிதல் நிலை மாகுலாவோடு இணந்து ஏற்படும் போதும் அல்லது மாக்குலாவின் முன்புவிட்ரியஸ் இரத்த ஒழுக்கு ஏற்படும் போதும் பார்வைக் குறையத் தொடங்குகிறது'

கண்ணின் உட்புறம் இரத்த ஒழுக்கினை குறிக்கும் அறிகுறிகள்எவை?
'கரும்புள்ளிகள் தெரிதல், படலம் படர்ந்தது போல தெரிதல், திடீரென பார்வை குறைதல்.'

நீரிழிவு நோயாளிகள் எவ்வெப்போது எவ்வாறு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்?
'உங்களுக்கு நீரிழிவுநோய் இருக்குமானால், நீங்கள் ஒரு விழித்திரைகண் நிபுணரிடம் விரிவாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

• டயபீடிக் ரெடினோபதி இல்லை எனில் வருடந்தோறும
• ஆரம்ப டயபீடிக் ரெடினோபதி எனில் ஆறு மாதத்திற்கொரு முறை
• மற்றவர்கள் தங்கள் கண் மருத்துவரின் பரிந்துரைபடி பொதுவாக 4 முதல் 6 மாதங்களுக்கொரு முறை.


ஃபண்டஸ் ஃபுளோரெசின் ஆன்ஜியோ_க்ராஃபி என்றால் என்ன?
'இது மருத்துவமதிப்பீடுசெய்யும் ஒரு ஆய்வு முறையாகும். இரத்தநாளங்களில் ஒரு சாயத்தை ஊசிமூலம் செலுத்தி, விழித்திரையை, ஊதாநிற ஒளியில் புகைப்படம் பிடிப்பதாகும்.
• இது வழக்கத்திற்கு மாறான திரவங்களின் கசிவைக் கண்டறிகிறது.
• இது இரத்தத்திற்கு மாறான இரத்தக் குழாய்களைக் கண்டறிகிறது'


போட்டோ கோயாகுலேஷன் ஏன்?
'இந்தச் சிகிச்சக்கானகாரணம், விழித்திரைக்குள்ஏற்படும் மாற்றங்களைத் தடைசெய்வதற்கும், பார்வைய மீட்டுத்தருவதற்கு உதவுவதேயாகும். விழித்திரையின் சிலபகுதிகளைச் சிதைப்பது, தவறான புதிய இரத்தக்குழாய்களக் கட்டுப்படுத்வதற்கும், விட்ரியஸ் இரத்த ஒழுக்கின் மற்றும் விழித்திரை பிரிதலின் விளவுகளக் குறைப்பதற்கும் உதவுகிறது. இது வழக்கத்திற்கு மாறான கசிவையும் குறைக்கிறது'


லேசர் சிகிச்சை பார்வைய அதிகரிக்கிறதா? லேசர் நோயைக் குணப்படுத்கிறதா?
'அதிகமான நோயாளிகளுக்குலேசர் சிகிசசை பார்வையப் பாதுகாத்து மேலும் பார்வைக் குறைவதை தடுக்க உதவுகிறது பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதம் வரை குறக்கிறது.இது கரும்புள்ளிகள நீக்குவதில்லை. மேலும், ஏற்கெனவேவிட்ரியஸ் இரத்த ஒழுக்கு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அதையும் சரி செய்வதிலலை. லேசர் சிகிச்சயளித்ததும் நோயின் தன்மை முன்னேற்றமும் கண்டாலும், சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.'


லேசர் பார்வையக் குறைக்குமா?
'சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப் பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம்.லேசர் சிகிச்சைக்குப் பின்னரும் சில குறிப்பிட்ட நபர்களுக்குப் பார்வையிழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதும், அவர்களுக்கு விட்ரியஸ்ஆபரேஷன் தேவைப்படலாம் என்றும், குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.'

விட்ரியஸ் ஆபரேஷனின் பயன் என்ன?

'புதிய வளர்ச்சியடைந்தஅறுவை சிகிச்சை முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மக்ரோ சர்ஜரி மூலமாக 60-70 % வரை இந்த குறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பார்வையில் முன்னேற்றம் கிடக்க வாய்ப்புள்ளது.விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் உட்புறத்தில்உள்ள இரத்ததையும், அசாதாரண பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவது ஆகும்.'


உங்கள் பார்வையைப் பாதுகாக்க நீங்கள்என்ன செய்ய முடியும்?

டயபீடிக் ரெட்டினோபதி நோய்க்கான சிகிச்சையின் வெற்றி ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சயளிப்பதனாலோ அல்லது கண் டாக்டரின் சிகிச்சையினாலோ நிர்ணயிக்கப்படுவதல்லை.ஆனால் நோயாளியின் நடவடிக்கையும், கவனமும், உணவுப் பழக்கமும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.

டயபீடிக் ரெட்டினோபதி எத்தகைய அறிகுறிகளுமில்லாமல் வரக்கூடியநோய் என்பதும் நினவில் கொள்ள வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே நோயை அறிந்து கொள்வது பார்வையிழப்பைத் தடுத்துப் பாதுகாக்க உதவும். டயபீடிக் ரெட்டினோபதிக்கான பரிசோதன


சர்க்கரை வியாதி கண்களை எவ்வாறு பாதிக்கிறது?
'சர்க்கரை வியாதி உள்ளசிலருக்கு கண்கள பாதிக்கும் வகையில் ஏற்படும் ஒரு நிலைக்கு விழித்திரை நோய் (ரெட்டினோபதி)என்று பெயர். கண்களின் பின்புறம் இருக்கும் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் குறைபாடே இதற்குக் காரணம். இது நம் பார்வையை ஓரளவிற்குப் பாதிக்கலாம். மேலும்பார்வை இழப்பிற்கும் காரணமாகலாம்.'


இந்நிலை எனக்கு ஏற்படுவதை என்னால் தெரிநது; கொள்ள முடியுமா?
'டயபீடிக் ரெட்டினோபதிஎப்போதும் தீவிரமான நிலைக்கு வரும் வரை, நம் பார்வையப் பாதிப்பதில்லை. தீவிரமான நிலையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதன, ஆரம்ப கட்ட நிலையில் நோயைக் கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வை இழப்பிற்கான சாத்தியக்கூறினைக் குறைக்கிறது'


இது முழுமையான பார்வை இழப்பை ஏற்படுத்துமா?
'ஆம். இந்நோயினால்பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து பரிசோதனகளச் செய்கொள்ளாவிட்டால் இந்நோய் பார்வை இழப்பிற்குக்கொண்டு போய்விடும்.'


கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
'கண்ணின் பின்புறத்தை இன்டரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும் கருவியைக் கொண்டு ;. கண்ணின் பாப்பா விரிவதற்காகச் சொட்டு மருந்திடப்படுகிறது கண்ணின் பாப்பா விரிவதற்கு சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் பரிசோதிக்கப்படுகிறது.இது கண்ணின் விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதுமில்லாத முறையாகும்.முழுப் பரிசோதனயும் வழக்கமாக 30 நிமிடங்களுக்குள் செய்யப்படும்.'


பரிசோதனக்கு வரும்போது கொண்டு வரவேண்டியவை என்ன?
'தற்போது அணியும் கண்கண்ணாடிகளைக் (படிப்பதற்கும் தூரத்தே உள்ள பொருட்களப் பார்ப்பதற்கும் உபயோகிக்கும் கண்ணாடிகள்) கண்ணின் பாப்பா விரிந்த பிறகு, கண்களக் கூசச்செய்யும் வெளிச்சத்தில் சிரமமின்றி நடமாட, ஒரு ஜோடிசூரிய ஒளி பாதுகாப்புக் கண்ணாடிகள் கொண்டு வரவேண்டியவை. சர்க்கரை வியாதியுள்ளவரானால் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ குறிப்பேடு ஏதுமிருக்குமேயானால், அவற்றையும் கொண்டு வருவது நல்லது.


பரிசோதனக்குப் பிறகு என்ன ஆகும்?
'கண்ணின் பாப்பா விரிவதற்காகப் போடப்படும் சொட்டு மருந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு அருகே பயன்படுத்தும் வேலைகளை செய்வதற்கும் வாகனங்களை ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படலாம். எனவே பரிசோதனக்கு வரும்போது வாகனங்களை ஓட்டி வருவதைத் தவிர்க்கலாம்.

முக்கிய குறிப்பு : பரிசோதனை முடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்குஒரு உதவியாளர் இருப்பது மிகவும் நல்லது'


பரிசோதனக்குப் பின்னர் என்ன செய்யப்படும்?
'பரிசோதனக்குப் பிறகுமேலும் பரிசோதனைகள் அல்லது சிகிச்சை தேவைப்படுமேயானால், ; ஒரு குறிப்பிட்ட நாளில் விரிவான கண் பரிசோதனைக்கும் லேசர் சிகிச்சைக்கும் வரவேண்டும்.'

சில நேரங்களில் கண்களுக்குச் சொட்டு மருந்திட்ட பின்னர், கண்கள் சகஜ நிலைக்கு மாறுவதில் சிரமம் நேரிடலாம்.ஒரு வேளை, கண்களில் வலி அல்லது சகஜமான நிலையில்லாமலிருப்பதாக உணர்ந்தால், மருந்து கூடத்தைதொடர்பு கொள்ள வேண்டும்.'
நினைவில் கொள்க:

எல்லா வியாதிகளுக்கும் எடுத்துக்கொள்ளும் அதே கவனத்தை, கண்களுக்கும் கொடுக்கவும்.
பார்வை உங்களுக்கு மிக மிக முக்கியம். நீங்கள் சுதந்திரமாக நடமாடவேண்டும் என்றால், வருடாந்திர கண் 
பரிசோதனைமனதிற்கு நிம்மதி கொடுக்கும்