சனி, 23 ஜூன், 2012

முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா!


SDPI கட்சி உருவாகி மூன்று ஆண்டுகளை கழித்து 4 வது ஆண்டில் அடுயெடுத்து வைக்கிறது. இதனையொட்டி நாடுமுழுவதும் SDPI கட்சியினர் 4 ம் ஆண்டு துவக்கத்தினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் கட்சி சார்பாக 21-06-2012 இன்று நகர் முழுவதும் ஊர்வலமாக வந்து அரபு சாகிபு பள்ளிவாசல் அருகிலும், பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர் போன்ற பகுதிகளிலும் கட்சி கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்கினர் மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மச்சான் () A. அபுபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முகைதீன் பள்ளி திடலில் காலை 11.00 மணியளவில் இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்தினர்.

இரத்தவகை கண்டறியும் முகாமை மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் துவங்கி வைக்க ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது இரத்தம் எந்த வகையை சார்ந்தது என அறிந்துகொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்கள் வழங்கினார். அணைத்து நிகழ்ச்சிகளிலும் SDPI கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.