Capital Gate abu dhabi UAE
அபுதாபியில் ( தலைநகர் நுலைவாயிள் ) அதாவது கேபிடல் கேட் என்ற கட்டிடம் கட்டபட்டுள்ளது அது இத்தாலியில் உள்ள பைசாநகரத்து சாய்ந்த கோபுரத்தைவிட நான்கு மடங்கு சாய்ந்து கட்டபட்டுள்ளது பைசாநகரத்து சாய்ந்த கோபுரத்தின் சாய்ந்த நிலை 3.97.டிக்ரி ஆனால் இதன் சாய்ந்த நிலை 18.டிக்ரி இது ஒரு guinnes record
சனி, 28 ஆகஸ்ட், 2010
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்? - அப்துல்லாவான பெரியார்தாசன் விளக்கம்!
Posted by
இம்ரான்
at
11:34 PM
விளக்கம்!

பெரியார் மீதும், அவரின் கொள்கைகள் மீதும் தீவிர பற்று வைத்திருந்த பெரியார்தாசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். பெரியார்தாசன் என்ற பெயரை அப்துல்லா என்றும் மாற்றியுள்ளார்.
இதுகுறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: பிற மதங்களில் உள்ள அறிவு ஜீவிகள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இஸ்லாம் மதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: உலகத்தில் உள்ள எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். பகவத் கீதை, பைபிள் என்று எல்லாவற்றையும் வைத்து நாம் அறிவுபூர்வமாக ஆராய்ச்சி செய்து பார்த்தால், நேரடியாக இறைவன் சொன்னதாக எந்த வேதமாவது இருக்கிறதா?
முனுசாமி சொன்னதாக ராமசாமி கேட்டதாக, சின்னசாமி நம்பியதாக, கந்தசாமி அறிந்ததாக அது ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தாத்தாக்கள் சொல்ல பேரன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, நேரடியாக எந்த இறைவனும் சொன்னதாக இல்லை.
இஸ்லாம் மதத்தில் மட்டுமே இறைவன் நேரடியாக சொல்லியிருக்கிறான். அதனால்தான் நான் இந்த களத்தில் இறங்கியிருக்கிறேன். இதற்காக பிரச்சாரம் செய்கிறேன்.
இந்து மதத்தில் பகவத் கீதைக்கு சங்கராச்சாரியார், நித்யானந்தா என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட மாறாமல், 1600 வருடங்களாக இருக்கும் வேதம் எது? அப்படியென்றால் அறிவு ஜீவிகள் எந்த பக்கம் வரணும்.
கேள்வி: இஸ்லாமிய ரீதியாக உங்களது எதிர்கால திட்டம் என்ன?
பதில்: இறைவன் நாடுகிற வழிகளிலெல்லாம் இருக்கும். நான் என்னவாக இருக்க வேண்டும் என்று இறைவன் எப்படி நினைக்கிறானோ தெரியவில்லை. ஆனால் நான் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். தொழுகை, நோன்பு, ஹச் பயணம் போவது உள்ளிட்ட ஐந்து கடமைகளும் யாருக்காவும் இல்லை. எனக்காவும் இறைவனுக்காகவும் செய்கிறேன். இது யாருக்கும் எதிரானது கிடையாது. நான் யாசிக்கப் போகிறேன். இறைவனை புகழப் போகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் படி மன்றாடப் போகிறேன். இதைத்தான் நான் தொழுகையில் செய்யப்போகிறேன்.
இதேபோல் சமூகத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், நான் ஏற்றுக்கொண்டது போலவே, வழிதவறி நடப்பவர்களை இந்தப் பக்கம் இழுப்பதற்கு என்னுடைய வாக்கு வங்கியை இறைவன் பயன்படுத்திக்கொள்வான் என்று நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
